என் மலர்
உள்ளூர் செய்திகள்

களியக்காவிளை அருகே கேரள அரசு பஸ் தடுப்பு சுவரில் மோதி விபத்து
- களியக்காவிளை அருகே திருத்தோபுரம் பகுதியில் பஸ் வந்த போது அதன் முன் பக்க டயர் வெடித்தது.
- ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.
கன்னியாகுமரி:
திருவனந்தபுரத்தில் இருந்து இன்று காலை கேரள அரசு பஸ் கன்னியாகுமரிக்கு புறப்பட்டு வந்தது. எர்ணா குளத்தைச் சேர்ந்த சோம சுந்தரம் பஸ்சை ஓட்டி வந்தார். களியக்காவிளை அருகே திருத்தோபுரம் பகுதியில் பஸ் வந்த போது அதன் முன் பக்க டயர் வெடித்தது.
இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி சாலையில் வைத்திருந்த தடுப்பு சுவரில் மோதியது. இதில் பஸ்சின் முன்பகுதி சேதமடைந்தது. பஸ்சின் கண்ணாடியும் உடைந்து நொறுங்கியது.ஓட்டு நரின் சாமர்த்தியத்தால் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.
Next Story






