search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தோவாளையில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மணிமண்டப பணிகளை தொடங்க வேண்டும்
    X

    தோவாளையில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மணிமண்டப பணிகளை தொடங்க வேண்டும்

    • சட்டசபையில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
    • கலெக்டர் தலைமையில் ஒழுங்குப்படுத்தப்பட்டு விரைவில் அந்தப்பணி நிச்சயமாக தொடங்கும்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டம் தோவாளையில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைக்கு மணிமண்டபம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. தற்போது அந்த பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் தமிழக சட் டசபை கூட்டத் தொடரில் நேற்று கேள்வி நேரத்தின் போது கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் என்.தளவாய்சுந்தரம் பேசியதாவது.-

    கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைக்கு தோவாளையில் மணிமண்டபம் கட்ட நிதி ஒதுக்கி, அந்த பணி முடியும் தருவாயில் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. செய்தித்துறை அமைச்சர் நேரடியாக வந்து விசாரித்து அந்த இடம் இந்து அறநிலையத்து றைக்கு சொந்தமான இட மாக இருப்பதால், அந்த இடத்தை குத்தகைக்கு எடுத்து கட்டுமான பணி மீண்டும் தொடங்கப்படும் என்று கூறினார்கள். எனவே, மீண்டும் அந்த பணிகளை தொடங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்குபதில் அளித்து செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் கூறியதாவது:-

    இந்த பிரச்சினை தொடர்பாக என்னுடைய கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கடந்த கூட்டத் தொடரிலையே சட்டசபையில் இது குறித்து எடுத்து சொன்னார். தேர்தலுக்கு முன்பாகவே, அந்த பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

    இது குறித்து மாவட்ட கலெக்டரோடு நானும் (அமைச்சர் சாமிநாதன்) தொடர்பு கொண்டு பேசினேன். இந்த பிரச்சினை கோர்ட்டுக்கு சென்று விட்டது. மாவட்ட கலெக்டர் தலைமையில் இப்போது ஒழுங்குப்படுத்தப்பட்டு இருக்கிறது. விரைவில் அந்தப்பணி நிச்சயமாக தொடங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×