search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருணாநிதி நூற்றாண்டு விழா - மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
    X

    கருணாநிதி நூற்றாண்டு விழா - மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

    • அமைச்சர்கள் செஞ்சிமஸ்தான், மனோ தங்கராஜ் வழங்கினர்
    • விழாவில் 7,36,353 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    நாகர்கோவில்:

    முன்னாள் முதல்-அமைச் சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி மாற்றுத்திற னாளி களுக்கான மருத்துவ முகாம் நாகர்கோவில் எஸ்.எல்.பி. பள்ளியில் இன்று நடந்தது.

    விழாவிற்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். மாற்றுத்திறனாளிகள் அலுவலர் சிவசங்கரன் வரவேற்று பேசினார். மருத்துவ முகாமினை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்.

    பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார். 11 பயனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள்களும், 47 பயனாளிகளுக்கு திறன் பேசியும், 5 பேருக்கு பாதுகாவலர் நியமன சான்றும் வழங்கப்பட்டது. விழாவில் 7,36,353 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    விழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேசியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தாய் உள்ளத்தோடு மக்களை பார்த்து வருகிறார். இந்த அரசு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 6.8 லட்சம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர்.

    உலக நாடுகளில் இதை ஒப்பிடும்போது ஒரு சில நாடுகளில் உள்ள மக்கள் தொகையை விட அதிகமாக மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். தமிழகத்தில் ஆண்டுக்கு ரூ.1443 கோடி செலவில் மாற்றுத்திறனாளி களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தொழில் தொடங்கவும் கடன் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்திய துணை கண்டத்திலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மாற்றுத்திறனாளி களுக்கான உதவி தொகையை உயர்த்தி வழங்கியது தி.மு.க. அரசு தான். மாற்றுத்திறனாளிகள் எப்பொழுது வேண்டுமானா லும் தங்களது பிரச்சினைகளை எங்களிடம் நேரில் தெரிவிக்க லாம். மாற்றுதிறனாளிகள் நம்பிக்கையை இழந்து விடக்கூடாது. இந்த அரசு உங்களுக்கு எப்பொழுதும் உறுதுணையாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசியதாவது:-

    மாற்றுத்திறனாளி களுக்கு என்று தனி அந்தஸ்தை ஏற்படுத்திக்கொடுத்தவர் மறைந்த முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதி. கல்வி வேலை வாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை உயர்த்தி வழங்கி உள்ளார்.

    ஆரம்ப பள்ளி படிக்கும் மாணவர்கள் கல்வி அறிவு தடைபட்டு விடக்கூடாது என்பதற்காக காலை உணவுத்திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்.

    பெண் குழந்தைகள் உயர்கல்வி படிக்க வேண்டும் என்பதற்காக மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. பசிப்பிணியை போக்குவதுடன் அறிவு பிணியை போக்க முதல்-அமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய உதவி தொகை கிடைக்க இந்த அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள் அனைவரும் கல்வி கற்கும் நிலையை உருவாக்கவும் இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மக்கள் நலம் சார் அரசாக இந்த அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றார்.

    நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் மகேஷ், துணை மேயர் மேரி பிரின்சி லதா, ஒன்றிய செயலாளர் பாபு, தலைமை செயற்குழு உறுப்பினர் ரெமோன், மாநகர செயலாளர் ஆனந்த், இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன், மாவட்ட துணை செயலாளர் பூதலிங்கம், பள்ளி தலைமை ஆசிரியை ஜேமினா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    கேட்டல் மற்றும் பேச்சு பயிற்சியாளர் பிரியாதிரேஸ் நன்றி கூறினார்.

    Next Story
    ×