search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ. 49¼ கோடி செலவில் நவீனமயமாகும் கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் பொது மேலாளர் இன்று நேரில் ஆய்வு
    X

    சர்வதேச தரத்தில் நவீனமயமாகும் கன்னியாகுமரி ரெயில் நிலையத்தின் மாதிரி வரைபடத்தை படத்தில் காணலாம்

    ரூ. 49¼ கோடி செலவில் நவீனமயமாகும் கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் பொது மேலாளர் இன்று நேரில் ஆய்வு

    • ரெயில் நிலையத்தின் முகப்பு பகுதியானது விவேகானந்தர் நினைவு மண்டபம்போல் வடிவ மைக்கப்பட்டு அழகு படுத்தப்படுகிறது.
    • கூடுதல் பயணிகள் வந்து செல்லும் வகையில் இந்த ரெயில் நிலையம் விரிவுபடுத்தப்பட உள்ளது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி ரெயில் நிலையம் ரூ. 49¼ கோடி செலவில் நவீனமயமாக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து வெளிநாட்டு சுற்றுலாபயணிகளை கவரும் வகையில் இந்தரெயில் நிலையத்தின் முகப்பு பகுதியானது விவேகானந்தர் நினைவு மண்டபம்போல் வடிவ மைக்கப்பட்டு அழகு படுத்தப்படுகிறது. மேலும் கூடுதல் பயணிகள் வந்து செல்லும் வகையில் இந்த ரெயில் நிலையம் விரிவுபடுத்தப்பட உள்ளது.

    இந்த ரெயில் நிலையத்தில் கூடுதல் டிக்கெட் கவுண்டர்கள், ஓய்வு அறைகள், கழிவறைகள் உள்பட பல அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி ரெயில் நிலைய மேம்பட்டு பணிக்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த மே மாதம் 26-ந்தேதி கன்னியாகுமரி ரெயில் நிலையம் முன்பு உள்ள வளாகத்தில் நடந்தது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இருந்து பிரதமர் மோடி இந்த ரெயில் நிலையத்தின் மேம்பாட்டு பணியை காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    இதைத் தொடர்ந்து ரூ. 49¼ கோடி செலவில் சர்வதேச தரத்துக்கு நவீனமயமாக இருக்கும் கன்னியாகுமரி ரெயில் நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக திருவனந்தபுரம் கோட்ட ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தனி ரெயில் மூலம் இன்று காலை கன்னியாகுமரி வந்தார். அவர் கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் ரூ. 49¼ கோடி செலவில் நடைபெற இருக்கும் ரெயில் நிலைய விரிவாக்க பணிகள் குறித்து காட்சிபடுத்தப்பட்டிருந்த விளக்க படங்களை பார்வை யிட்டார். அதன் பின்னர் அவர் கன்னியாகுமரி ரெயில் நிலைய வளாகத்தில் நடைபெற்று வரும் விரி வாக்க பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அதன் பிறகு ரெயில்வே துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். பின்னர் அவர் தனி ரெயில் மூலம் நாகர்கோவில் ரெயில் நிலையத்துக்கு புறப்பட்டு சென்றார்.

    Next Story
    ×