search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிற்றாறு வனப்பகுதியில் வந்தது புலியா? சிறுத்தையா? - வனத்துறை அதிகாரிகள் ஆய்வு
    X

    சிற்றாறு வனப்பகுதியில் வந்தது புலியா? சிறுத்தையா? - வனத்துறை அதிகாரிகள் ஆய்வு

    • சீரோ பாயின்ட் பகுதியில் வந்த ஒரு சிறுத்தைப் புலியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்
    • செயற்கை கண்காணிப்பு காமிரா பொருத்தி 3 குழுக்களாக தொடர்ந்து ஆய்வு

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்ட வனப்ப குதியில் குறிப்பிட்ட பகுதிகள் களக்காடு முண்டன் துறை புலிகள் சரணாலயத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பேச்சிப்பாறையை ஒட்டிய கோதையாறு, சிற்றாறு உள்ளிட்ட வனப் பகுதிகளில் புலி நடமாடுவதாக மக்கள் மத்தியில் அடிக்கடி செய்திகள் பரவுவதுண்டு. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை பேச்சிப்பாறை சீரோ பாயின்ட் பகுதியில் வந்த ஒரு சிறுத்தைப் புலியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர். பின்னர் அந்த சிறுத்தைபுலி கூண்டிலிருந்து தப்பி ஓடி பேச்சிப்பாறை அணைக்குள் விழுந்து உயிரிழந்தது.

    இதே போன்று கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோதையாறு மின் நிலைய சாலையில் ஒரு புலியின் நடமாட்டம் அங்குள்ள கண்காணிப்புப் கேமராவில் பதிவானது.மேலும் கடையாலுமூடு அருகே சக்ரபாணி பகுதியில் தனியார் ரப்பர் தோட்டத்தில் புலி ஒன்று நடமாடுவதாக தகவல் வெளியான நிலையில் தனியார் ரப்பர் தோட்டம் சார்பில் கண்காணிப்பு கேமரா வைத்து புலியின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெருசிலம்பு வேளிமலை பகுதியில் தனியார் ரப்பர் தோட்டப் பகுதியில் அதிகாலையில் பால்வடிப்புக்கு சென்ற தொழிலாளர்கள் புலியைப் பார்த்தாக கூறியதையடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் பேச்சிப்பாறை அருகே வழுக்கம்பாறை சந்திப்பில் பஸ்சிலிருந்து இறங்கி சென்று கொண்டிருந்த சிற்றாறு ரப்பர் கழக குடியிருப்பை சேர்ந்த கல்லூரி மாணவர் அனீஷ் வயது 20 மற்றும் அவரது சகோதரி ஆகியோர் இங்குள்ள ரப்பர் கழக மேலாளர் அலுவலகப் பகுதியில் ரப்பர் தோட்டத் தில் ஒரு புலி நிற்பதைப் பார்த்தாக குயிருப்புப் பகுதியில் கூறினார்.

    இந்நிலையில் நேற்று காலையில் இதே குடியிருப்பைச் சேர்ந்த மோகன்ராஜ் என்ற தொழி லாளி இங்குள்ள மாடசாமி கோயில் பகுதியில் புலியைப் பார்த்தாகவும் கூறியுள்ளார். இதையடுத்து சிற்றாறு ரப்பர் கழக குடியிருப்பு வாசிகள் அதிர்ச்சியும் அச்சமும் அடைந்துள்ளனர். இந்நிலையில் வனத்துறை யினர் புலியின் நடமாட்டத்தை கண்கா ணிக்க வேண்டுமென்று ரப்பர் கழக தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். களியல் வனச்சரக அதிகாரி மொய்தீன் அப்துல் காதர் கூறியதாவது:- சிற்றாறுவன பகுதியில் வந்தது புலியா அல்லது சிறுத்தையா என்பது பற்றி அதை பார்த்தவர்களிடம் விசாரனை செய்து வருகிறோம். அந்த பகுதியில் செயற்கை கண்காணிப்பு காமிரா பொருத்தி 3 குழுக்களாக தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். தற்போது தொடர் மழை பெய்து வருவதால் அதன் கால் அடையாளங்கள் அழிந்துவிட்டது மற்றும் அது புலியா அல்லது சிறுத்தையா? என்பதை அதன் எச்சத்தை வைத்தும் ஆய்வு செய்து தீவிர விசாரனை மேற்கொண்டு வருகிறோம். எனவே அந்த பகுதியில் உள்ள மக்கள் அச்சபட தேவையில்ைல. இரவு பகலாக வனத்துறை ஊழியர்கள் மூலம் தீவரமாக கண்காணித்து வருகிறோம்,

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×