search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் கடை வீதிகளில் அலைமோதிய கூட்டம்
    X

    தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி நாகர்கோவில் செம்மாங்குடி சாலையில் பொருட்கள் வாங்க வந்த கூட்டத்தை படத்தில் காணலாம்.

    நாகர்கோவிலில் கடை வீதிகளில் அலைமோதிய கூட்டம்

    • தீபாவளி விற்பனை களை கட்டியது
    • போலீசார் பஸ் நிலையங்களிலும் ரோந்து பணியை மேற்கொண்டனர்.

    நாகர்கோவில்:

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் கடைவீதிகளில் கூட்டம் அலைமோதியது.

    நாகர்கோவில் நகரில் உள்ள அனைத்து கடைவீதிகளிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. செம்மாங்குடி ரோடு பகுதியில் உள்ள கடைகளில் புத்தாடைகள் எடுக்க ஏராளமான பொதுமக்கள் குவிந்திருந்தனர்.இதனால் அந்தச் சாலையில் கடுமையான நெருக்கடி ஏற்பட்டது.இதே போல் வடசேரி, கலெக்டர் அலுவலகம், மீனாட்சிபுரம் சாலைகளில் உள்ள கடைவீதிகளிலும் பொதுமக்கள் புத்தாடைகள் எடுக்க குவிந்திருந்தனர்.

    கடைவீதிகளில் கூட்டம் அலைமோதியதையடுத்து போலீசார் மப்டி உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.வடசேரி பஸ் நிலையம் மற்றும் அண்ணா பஸ் நிலையங்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.இதையடுத்து போலீசார் பஸ் நிலையங்களிலும் ரோந்து பணியை மேற்கொண்டனர். கேமரா பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்களில் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர்.போலீசார் ரோந்து சுற்றி வருவதை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மார்த்தாண்டம், அஞ்சுகிராமம், குளச்சல், தக்கலை பகுதிகளில் உள்ள கடைவீதிகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. பட்டாசு கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. பட்டாசு கடைகளில் பட்டாசுகள் வாங்குவதற்கு இளைஞர்கள் ஏராளமானோர் வந்திருந்த னர். அவர்கள் பல்வேறு விதமான பட்டாசுகளை ஆர்வமாக வாங்கி சென்றனர் .நாகர்கோவில் நகரில் உள்ள பேக்கரிகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.

    நாகர்கோவில் நகரில் உள்ள கடைவீதிகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டதையடுத்து கடுமையான போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட் டது. செட்டிகுளம் வேப்பமூடு, வடசேரி பகுதிகளில் வாகனங்கள் போக்குவரத்து நெருக்கடி யில் சிக்கித் தவித்தது. நாகர்கோவில் ரெயில் நிலையத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    போலீசார் பிளாட்பா ரங்களில் ரோந்து சுற்றி வந்தனர். குழித்துறை, இரணியல், நாங்குநேரி ரெயில் நிலையங்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.நாகர்கோவில் டவுன் ெரயில் நிலையத்திலும் போலீசார் பிளாட்பாரங்களில் ரோந்து சுற்றி வந்தனர்.

    Next Story
    ×