search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில் மார்க்கெட்டில் தக்காளி விலை மீண்டும் கிலோ ரூ.130 ஆக உயர்ந்தது
    X

    நாகர்கோவில் மார்க்கெட்டில் தக்காளி விலை மீண்டும் கிலோ ரூ.130 ஆக உயர்ந்தது

    • சிறிய வெங்காயம் ரூ.160 ஆக அதிகரிப்பு
    • 2 வாரங்களாக இஞ்சி விலை ஒரு கிலோ ரூ.300-க்கு கிடுகிடுவன உயர்ந்து.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மார்க் கெட்டுகளுக்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், நெல்லை மாவட்டத்தில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

    மேலும் திண்டுக்கல், மேட்டுப்பாளையம், ஒசூர், ஒட்டன்சத்திரம் பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. கடந்த சில நாட்களாக தக்காளியின் வரத்து குறைந்ததையடுத்து விலை தாறு மாறாக உயர்ந்தது. இது வரை இல்லாத அளவில் தக்காளி விலை ரூ.100-ஐ கடந்து விற்பனை யானது.

    கடந்த வாரம் கிலோ ரூ.130-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் தக்காளி யின் விலை நேற்று ரூ.100 ஆக குறைந்தது. இந்த நிலையில் தக்காளி விலை மீண்டும் உயர்ந்துள்ளது.இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.130-க்கு விற்கப் பட்டு வருகிறது. 28 கிலோ எடை கொண்ட தக்காளி பாக்ஸ் ரூ.4000-க்கு விற்ப னையா னது. சிறிய வெங் காயத்தின் விளை யும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல் கிறது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.50-க்கு விற்கப்பட்ட வெங்கா யம் 3 மடங்கு விலை உயர்ந்து இன்று ரூ.150-க்கு விற்கப்பட்டது. இதேபோல் பூடு விலையும் உயர்ந்துள்ளது. கிலோ ரூ.160-க்கு விற்பனை ஆனது. வெண்டைக்காய் விலை கணிசமான அளவு உயர்ந்துள்ளது.

    ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ.80-க்கு விற்கப்பட்டது. மிளகாய், பீன்ஸ் விலையும் கிலோ ரூ.100-ஐ கடந்து விற்பனையாகி வருகிறது. இஞ்சி விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு கிலோ இஞ்சி ரூ.80-க்கு விற்கப்பட்டு வந்தது. கடந்த 2 வாரங்களாக இஞ்சி விலை கிடுகிடுவன உயர்ந்தது. தற்பொழுது ஒரு கிலோ ரூ.300-க்கு விற்பனையானது.

    நாகர்கோவில் மார்க்கெட்டில் விற்பனையான காய்கறிகளின் விலை நிலவரம் வருமாறு:-

    நாட்டு கத்த ரிக்காய் ரூ.80, வரி கத்தரிக்காய் ரூ.65, வெண்டைக்காய் ரூ.80, தக்காளி ரூ.130, பூடு ரூ.160, உருளைக்கிழங்கு ரூ.30, பல்லாரி ரூ.25, சேனைக்கிழங்கு ரூ.70, கேரட் ரூ.80, பீன்ஸ் ரூ.110, மிளகாய் ரூ.130, புடலங்காய் ரூ.50, பாகற்காய் ரூ.30, இளவங்காய் ரூ.35, வெள்ளரிக்காய் ரூ.30, பூசணிக்காய் ரூ.30-க்கு விற்பனையானது.

    தக்காளி விலை மீண்டும் உயர்ந் துள்ளதையடுத்து இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தக்காளி யின் பயன்பாட்டை நாளுக்கு நாள் குறைத்து வருகிறார்கள். பீன்ஸ், கேரட் விலை உயர்ந்ததை யடுத்து குறைவான அளவில் பொது மக்கள் காய்கறி களை வாங்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகை யில் காய்கறிகளின் வரத்து குறைவாகவே உள்ளது. தக்காளி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    ஆனால் தற்பொழுது திருமண சீசன் மற்றும் மக்கள் தேவை அதிகரித்து உள்ளதால் விலை உயர்ந்து காணப்படுகிறது. இன்னும் ஒரு வார காலத்திற்குள் காய்கறி விலை இதே நிலை நீடிக்கும் அதன்பிறகு குறைய வாய்ப்புள்ளது என்றார்.

    Next Story
    ×