search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்க பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து சாமி சிலைகள் 23-ந்தேதி புறப்பாடு
    X

    திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்க பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து சாமி சிலைகள் 23-ந்தேதி புறப்பாடு

    • தமிழக, கேரள அமைச்சர்கள் பங்கேற்பு
    • நவராத்திரி விழா பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து திருவனந்தபுரம் அரண்மனைக்கு மாற்றப்பட்டது.

    கன்னியாகுமரி:

    தென் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகராக பத்மநாபபுரம் இருந்த போது அரண்மனையில் உள்ள மண்டபத்தில் நவராத்திரி விழா விமரிசையாக நடந்து வந்தது.

    பின்னர் தலைநகர் திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது. அப்போது சில ஆண்டுகள் மட்டுமே இங்கு விழா நடந்தது. பின்னர் விழா திருவனந்தபுரம் அரண்மனைக்கு மாற்றப்பட்டது. இதற்காக குமரியில் இருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை, வேளிமலை குமாரசாமி, அரண்மனை தேவாரக்கட்டு சரஸ்வதி தேவி ஆகிய சுவாமி விக்ரகங்கள் திருவனந்தபுரம்சென்று வருவது காலந்தொட்டு நடந்து வருகிறது.

    இந்த ஆண்டு நவராத்திரி விழாவையொட்டி சுவாமி விக்ரகங்கள் 23-ந்தேதி கேரளாவிற்கு புறப்பட்டு செல்கின்றன. விழாவில் பங்கேற்க 22-ந்தேதி சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் விக்ரகம் புறப்பட்டு பத்மநாபபுரம் வந்து சேர்கிறது. 23-ந்தேதி காலையில் வேளிமலை குமாரசாமி பத்மநாபபுரம் சரஸ்வதி அம்மன் கோவிலை வந்தடையும்.

    பின்னர் அங்கிருந்து பவனி கேரள போலீசாரின் அணி வகுப்பு மரியாதையு டன் தொடங்கும்.முன்ன தாக பவனியின் முன்னே கொண்டு செல் லும் மன்னரின் உடைவாள் கைமாறும் நிகழ்ச்சி அரண்ம னையில் உள்ள உப்பரிகை மாளிகையில் 23-ந்தேதி 7.30 முதல் 8.30-க்குள் நடைபெறும்.

    இந்நிகழ்ச்சியில் கேரள தேவசம்போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன், தமிழக தொழில்நுட்பத்துறை தகவல் அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் தமிழக கேரள உயர் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

    உடைவாள் கைமாறிய தும் அரண்மனை தேவா ரக்கட்டு சரஸ்வதியம் மன் ஆலயம் கொண்டு வரப்பட்டு பூஜைகள் செய் யப்படும். அங்கிருந்து அரண் மனை தேவாரக்கட்டு சரஸ் வதிதேவி யானை மீது அமர, பல்லக்குகளில் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை, வேளி மலை முருகன் ஆகியோர் வீற்றிருக்க பெண்களின் தாலப்பொலியுடன் பவனி தொடங்கும். இந்த பவனி

    அக்.25-ந்தேதி திருவனந்தபுரம் சென்றடைகிறது. அங்கு தொடங் கும் நவராத்திரி பூஜையில் சரஸ்வதி தேவி கோட் டைக்ககம் நவராத்திரி மண்டபத்திலும், வேளி மலைமுருகன் ஆரியசாலை கோவிலிலும், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை செந்திட்டை பகவதி கோவி லிலும் பங்கேற்ககின்றனர்.

    பின்னர் விஜயதசமிக்கு முடிந்து நல்லிருப்பை அடுத்து அங்கிருந்து விக்ரகங்கள் பவனியாக புறப்பட்டு பத்மனாபபுரம் வந்தடையும்.

    Next Story
    ×