search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாடாளுமன்றத்தில் செங்கோல் இடம்பெறுவது தமிழுக்கும், தமிழர்களுக்கும் கிடைத்த பெருமை
    X

    நாடாளுமன்றத்தில் செங்கோல் இடம்பெறுவது தமிழுக்கும், தமிழர்களுக்கும் கிடைத்த பெருமை

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பாராட்டு
    • உலகில் வாழும் தமிழர்கள் எல்லாம் பெருமையும், மகிழ்ச்சியும் அடையும் பொன்னாளாகும்.

    நாகர்கோவில் :

    முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் சுமார் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி நாளை (28-ந்தேதி) திறந்து வைக்கிறார். இக்கட்டிடத்தில் தமிழுக்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் செங்கோல்இடம் பெறுகிறது.

    தமிழர்களின் பெருமை பேசும் செங்கோலுக்கு பல சிறப்புகள் உண்டு. இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கும் தருணத்தை எப்படி அடையாளப்படுத்து வது என்பது குறித்து ஜவகர்லால் நேரு, ராஜாஜி யிடம் கருத்து கேட்டார்.

    அப்போது தமிழகத்தில் மன்னர் ஆட்சி மாற்றம் நிகழும் போது ராஜகுருவிடம் இருந்து செங்கோல் பெறும் மரபு இருப்பதை ராஜாஜி எடுத்து கூறினார். அதன்படி மவுன்ட் பேட்டன் பிரபுவிடம் இருந்து ஆட்சி அதிகாரம் மாற்றத்தை ஒரு செங்கோல் வழியாக செய்யலாம் என்பதை ஜவகர்லால் நேரு ஒப்பு கொண்டார். ராஜாஜி நேரடியாக தமிழகத்தில் முக்கிய ஆதீனங்களில் ஒன்றான திருவாவடுதுறை ஆதீனத்தை தொடர்பு கொண்டு செங்கோல் செய்து கொடுக்க ஏற்பாடு செய்தார்.அதன்படி இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, ஆட்சி அதிகாரம் மாறியதற்கான அடையாளமாக அளிக்கப்பட்ட செங்கோலை தயாரித்து அளித்த பெருமை திருவாவடுதுறை ஆதீ னத்துக்கு உண்டு. தற்போது பல ஆண்டுகளுக்கு பிறகு புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டிருக்கும் நிலையில் அன்றைக்கு அளிக்கப்பட்ட செங்கோலும் புதுப்பிக்கப் பட்டிருக்கிறது. இந்த செங்கோல் நாடாளுமன்ற சபாநாயகர் இருக்கை அருகே காட்சியளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த செங்கோல் நீதிக்கும், நேர்மைக்கும் அடையாளமாக விளங்கும். இது தமிழர்களுக்கு கிடைத்த பெருமை. நாடாளு மன்றத்தில் செங்கோல் அலங்கரிக்கும் நாள் உலகில் வாழும் தமிழர்கள் எல்லாம் பெருமையும், மகிழ்ச்சியும் அடையும் பொன்னாளாகும்.

    இதற்காக பிரதமர் மோடிக்கு எனது உளமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×