search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரியில் 10 இடங்களில் நடந்தது - போலீஸ் எழுத்து தேர்வு மையத்திற்கு காலையிலேயே வந்த பெண்கள் கைக்கடிகாரங்களை கழற்றி கொடுத்து விட்டு சென்றனர்
    X

    குமரியில் 10 இடங்களில் நடந்தது - போலீஸ் எழுத்து தேர்வு மையத்திற்கு காலையிலேயே வந்த பெண்கள் கைக்கடிகாரங்களை கழற்றி கொடுத்து விட்டு சென்றனர்

    • குமரி மாவட்டத்தில் தேர்வு எழுதுவதற்கு 11 ஆயிரத்து 907 பேர் விண்ணப்பித்திருந்தனர். 10 தேர்வு மையங்களில் தேர்வு நடந்தது.
    • பார்வதிபுரம் பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரியிலும் தேர்வு நடந்தது. இந்த தேர்வு மையத்தில் பெண்கள் தேர்வு எழுத ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது

    நாகர்கோவில்

    தமிழ்நாடு சீருடை பணி யாளர் தேர்வு வாரியம் பொ துத்தேர்வு 2022-க்கான 2-ம் நிலை காவலர் ஆண் மற்றும் பெண் ஆயுதப்படை மற்றும் சிறப்பு தமிழ்நாடு சிறப்பு காவல் படை 2-ம் நிலை சிறைத்துறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிக்கான நேரடி தேர்வு இன்று நடந்தது.

    குமரி மாவட்டத்தில் தேர்வு எழுதுவதற்கு 11 ஆயிரத்து 907 பேர் விண்ணப்பித்திருந்தனர். 10 தேர்வு மையங்களில் தேர்வு நடந்தது. நாகர்கோவிலில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் தேர்வு எழுதுவதற்கு காலையிலேயே வந்திருந்தனர். அவர்கள் காலை 8.30 மணிக்கு பிறகு தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    தேர்வு எழுத வந்தவர்கள் தேர்வு மையத்திற்குள் அவர்களது அனுமதி சீட்டை பரிசோதனை செய்த பிறகு அனுமதிக்கப்பட்டனர். பார்வதிபுரம் பொன் ஜெஸ்லி பொறி யியல் கல்லூரியிலும் தேர்வு நடந்தது. இந்த தேர்வு மையத்தில் பெண்கள் தேர்வு எழுத ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. காலையிலேயே தேர்வு மையத்திற்கு பெண்கள் தங்களது பெற்றோர்கள் மற்றும் கணவர்களுடன் வந்திருந்தனர்.

    ஒரு சில பெண்கள் கைக் குழந்தைகளையும் கொண்டு வந்திருந்தனர். அவர்கள் தேர்வு மையத்திற்குள் செல்லும்போது கைக்குழந்தைகளை பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு தேர்வு மையத்திற்கு சென்றனர். தேர்வு மையத்திற்குள் சென்ற பெண்கள் கைக்கடிகாரம் அணிந்து சென்றனர். பரிசோதனையில் ஈடுபட்ட போலீசார் அதை கழற்றுமாறு கூறினர். இதையடுத்து கைக்கடி காரத்தை கழற்றி உறவினர்களிடம் ஒப்படைத்து விட்டு சென்றனர். சிலர் அதற்கென ஒதுக்கப்பட்ட அறையில் வைத்து சென்றனர்.

    தேர்வு எழுத வந்த பெண்களை அழைத்து வந்தவர்கள் மையத்திற்கு வெளியே காத்திருந்தனர். தேர்வு மையத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆய்வு செய்தார்.

    ஆரல்வாய்மொழி ஜெய மாதா பொறியியல் கல்லூரி, தோவாளை லயோலா பொறியியல் கல்லூரி, தோவாளை சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரி, ஆரல்வாய்மொழி டி.எம். ஐ. கல்லூரி, அஞ்சுகிராமம் ரோகிணி பொறியியல் கல்லூரி, சுங்கான்கடை புனித சேவியர் பொறியியல் கல்லூரி, இறச்சகுளம் அமிர்தா பொறியல் கல்லூரி, நாவல்காடு ஜேம்ஸ் பொறியியல் கல்லூரி ஆகிய மையங்களில் தேர்வு நடந்தது. தேர்வு மையத்திற்குள் தேர்வு எழுதுபவர்களை தவிர மற்றவர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

    காலையில் 10 மணிக்கு தொடங்கி தேர்வு மதியம் 12.40 மணிக்கு முடிவ டைந்தது. தேர்வு மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    Next Story
    ×