search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் 100 குளங்களில் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி - குறைதீர்க்கும் கூட்டத்தில் தகவல்
    X

    குமரி மாவட்டத்தில் 100 குளங்களில் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி - குறைதீர்க்கும் கூட்டத்தில் தகவல்

    • சிமெண்ட் சாலைகள் அலங்கார தரைகள் பதிப்பதால் பாசன கால்வாய்கள் சேதம் அடைகிறது.
    • விவசாய நிலங்கள் பிளாட்டுகளாக மாற்றப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடந்தது. கலெக்டர் ஸ்ரீதர் விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். மாவட்ட வருவாய் அதிகாரி பொறுப்பு ரேவதி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண் டனர்.

    கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் உள்ள பாசன கால்வாய்களின் கரைப்பகுதிகளில் சிமெண்ட் சாலைகள் அலங்கார தரைகள் பதிப்பதால் பாசன கால்வாய்கள் சேதம் அடைகிறது. இதன் காரணமாக கடைமடை பகுதிகள் வரை தண்ணீர் செல்வதில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதே நிலை நீடித்தால் கடை வரம்பு விவசாயம் அழிந்து விடும். எனவே இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    குமரி மாவட்டத்தில் குளங்களில் இருந்து மணல் எடுப்பதற்கு அதிகாரிகள் அனுமதி அளிப்பதில் கா லதாமதம் ஆக்கி வருகி றார்கள். ஆனால் நாகர்கோ வில் நகரின் மையப்பகுதியில் உள்ள சுப்பையார் குளத்தில் இருந்து தினமும் ஏராளமான லாரிகளில் மணல் எடுக் கப்பட்டு வருகிறது. இதை தடுக்க அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை பற்றி தெரிவிக்க வேண்டும்.

    வெளி மாவட்டங்களில் இருந்து தினமும் சுங்கான் கடை வழியாக ஏராளமான கனரக வாகனங்களில் மணல் கொண்டு செல்லப் படுகிறது. விவசாய நிலங்கள் பிளாட்டுகளாக மாற்றப்பட்டு வருகிறது.

    விவசாயத்திற்கு பயன்படும் மணலை எடுக்க அதிகாரிகள் அனுமதி அளிக்காதது வேதனை அளிக்கிறது. வண்டல் மண்ணை விவசாயத்திற்கு எடுக்க அனுமதி அளிக்கும் வகையில் நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் மேற்பார்வையில் குளங்களில் மணல் எடுக்க அனுமதி அளிக்க வேண்டும்.

    புத்தன்அணையிலிருந்து நாகர்கோவில் நகருக்கு தண்ணீர் எடுக்கும் திட்டத்தை கைவிட வேண் டும். குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் இல்லாமல் பொது மக்கள் தவித்து வருகிறார்கள். நாகர்கோவில் நகருக்கு புதிய குடிநீர் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புத்தளத்தில் உள்ள தென்னை பண்ணையில் தென்னை மரங்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டு வருகிறது. தேங்காய் விலை ரூ.9 க்கு விற்கப்பட்டு வரும் நிலையில் மரங்களின் விலை ரூ.125 முதல் ரூ.300க்கு விற்கப்பட்டு வருகிறது. இதை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நீரினை பயன் படுத்துவோர் சங்க தேர்தல் தற்போது நடந்து முடிந் துள்ளது. புதிதாக தேர்ந் தெடுக்கப்பட்ட தலை வர்களுக்கு பதவியேற்பு விழா நிகழ்ச்சியை நடத்த வேண்டும். மேலும் தேர்வு செய்யப்படாமல் காலியாக உள்ள பதவி இடங்களை நிரப்ப உடனே தேர்தல் நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதற்கு பதிலளித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் தற்போது 100 குளங்களில் மணல் எடுப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. குளங்களில் இருந்து மணல் எடுப்பதற்கு 302 விண் ணப்பங்கள் பெறப்பட்டுள் ளது. அதிகாரிகள் பரிசீலித்து மணல் எடுப்பதற்கு அனுமதி வழங்கி வருகிறார்கள்.

    புத்தளம் தென்னை பண்ணையில் மரங்களின் விலையை குறைப்பது குறித்து அரசு தான் முடிவு செய்ய முடியும். நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தலில் வெற்றி பெற் றோருக்கான பதவி ஏற்பு விழா நிகழ்ச்சியை விரை வில் நடத்துவது தொடர்பாக ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.

    Next Story
    ×