search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்திற்கு வருகை தரும் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
    X
    கூட்டத்தில் மேயர் மகேஷ் பேசிய காட்சி

    குமரி மாவட்டத்திற்கு வருகை தரும் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

    • தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு
    • போக்குவரத்து நெரிசல் இல்லாமல் கட்டுப்பாடுடன் வரவேற்பது அவசியம்.

    நாகர்கோவில்:

    உலக மீனவர் தினத்தை முன்னிட்டு குமரி மாவட்டம் முட்டத்தில் விழா நடைபெற உள்ளது. இந்த மீனவர் தினவிழாவில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. கலந்து கொள்கிறார்.

    இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் வருகை யையொட்டி அவருக்கு அளிக்க வேண்டிய வர வேற்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் ஒழுகினசேரியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்துக்கு அவை தலைவர் எப்.எம்.ராஜ ரத்தினம் தலைமை வகித் தார். சிறப்பு விருந்தினராக குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மேயருமான மகேஷ் கலந்து கொண்டார்.

    அப்போது அவர் பேசிய தாவது:-

    தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 20-ந் தேதி இரவு தூத்துக்குடி வருகிறார். பின்னர்

    21-ந்தேதி காலை அங்கு திரைப்பட விழாவை தொடக்கி வைத்து விட்டு கார் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கு மதிய உணவை முடித்த பிறகு முட்டத்தில் நடைபெறும் மீனவர் தினவிழாவில் கலந்து கொள்கிறார்.

    நான் மாவட்ட செயலா ளராக புதிதாக பொறுப்பு ஏற்றுள்ளேன். அதோடு புதிய நிர்வாகிகள் பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக உதயநிதி ஸ்டாலின் குமரி மாவட்டம் வருகிறார். எனவே அவருக்கு பெரிய வரவேற்பை கொடுக்க வேண்டும். கடந்த 7.9.2022 அன்று ராகுல்காந்தி நடை பயணத்தை தொடங்கி வைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்த போது காவல்கிணறு சந்திப்பில் கொடுத்த வரவேற்பை போலவும், அதை விட எழுச்சியுடனும் வரவேற்க வேண்டும்.

    இதுவரை குமரி மாவட்டம் பார்த்திடாத வரவேற்பை அவருக்கு அளிக்க வேண்டும். போக்கு வரத்து நெரிசல் இல்லா மல் கட்டுப்பாடுடன் வர வேற்பது அவசியம்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    கூட்டத்தில், குமரி மாவட்டம் வருகை தரும் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும், 2024 நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதி வேட்பாளராக யார் அறி விக்கப்பட்டாலும் அவரது வெற்றிக்கு பாடுபட வேண் டும், வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு முகாமில் புதிய வாக்காளர்களை சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின், மாவட்ட பொருளாளர் கேட்சன், மாநகர செயலாளர் ஆனந்த், மாநில மகளிர் தொண்டரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், செயற்குழு உறுப்பினர்கள் பார்த்தசாரதி, தாமரை பாரதி, சதாசிவம், பொதுக்குழு உறுப்பினர் ஜீவானந்தம், ஒன்றிய செயலாளர்கள் லிவிங் ஸ்டன், சுரேந்திரகுமார், பாபு, மதியழகன், பிராங்கி ளின், ரமேஷ்பாபு, உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற தலைவர் பிரபா ராம கிருஷ்ணன், துணைச் செய லாளர்கள் பூதலிங்கம், சோமு, கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×