search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து போலீஸ்இல்லாததால்  சாலையை கடக்க திண்டாடும் பள்ளி மாணவ-மாணவிகள்
    X

    காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து போலீஸ்இல்லாததால் சாலையை கடக்க திண்டாடும் பள்ளி மாணவ-மாணவிகள்

    • மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்
    • போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டுனர்களும் பாதசாரிகளும் பெரும் சிரமப்பட்டு வருகிறார்கள்

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அருகே உள்ளது கொட்டாரம். இந்த ஊர் அகஸ்தீஸ்வரம் வட்டாரத்தின் தலைநகராக கருதப்படுகி றது. அதுமட்டு மின்றி கன்னியாகுமரி- நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் கன்னியாகுமரியில் இருந்து 5-வது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது. இந்த ஊரின்சந்திப்பில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது.இந்தப் பள்ளிக்கூடத்துக்கு எதிர்புறம் தபால் நிலையம் உள்ளது. இந்த சந்திப்பில் இருபுறமும் ஓட்டல் மற்றும் கடைகளும் உள்ளன.

    இந்த சந்திப்பு வழியாக கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் மார்க்கமாக ஏராளமான வாகனங்கள் அடிக்கடி சென்று வரு கின்றன. இதனால் கொட்டா ரம் சந்திப்பு பகுதி கடும் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த பகுதியாக உள்ளது. இந்த சந்திப்பு பகுதியில் காலை மற்றும் மாலை வேளையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டுனர்களும் பாதசாரிகளும் பெரும் சிரமப்பட்டு வருகிறார்கள். இந்த நெருக்கடியான சாலையில் ஒரு புறம் அரசு மேல்நிலைப்பள்ளியும் மற்றொருபுறம் அரசு தொடக்கப் பள்ளியும் அமைந்து உள்ளது.

    இதனால் காலை பள்ளி தொடங்கும் நேர த்திலும் மாலையில் பள்ளி விடும் நேரத்திலும் மாணவ மாணவிகள் ரோட்டை கடக்க பெரும் சிரமப்படுகிறார்கள். முன்பு எல்லாம் "பீக்அவர்ஸில்" காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 3 மணி முதல் 5 மணி வரையிலும் இந்த பள்ளிகள் முன்பு போக்குவரத்து போலீசார் நின்று போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துவது வழக்கம். கொட்டாரம் சந்திப்பில் இரவு 8 மணி வரை போலீசார் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவார்கள்.

    ஆனால் சமீபகாலமாக இந்த பகுதியில் போக்கு வரத்து போலீசாரை காண முடிவதில்லை. போலீசார் இல்லாததால் மாணவ-மாணவிகள் ரோட்டை கடந்து செல்ல முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. வாகனங்களின் அசுர வேகம் மாணவ-மாணவிகளை மிரளச் செய்கிறது.

    பள்ளிகள் திறந்து ஒரு வாரத்துக்கு மேல் ஆன பிறகும் இதுவரை போக்கு வரத்து போலீசார் பள்ளிகள் முன்பு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் நியமிக்கப்படவில்லை. இந்தப் பள்ளிக்கூடத்தில் பணிபுரியும் ஆசிரியர்களே சிலசமயங்களில் போக்கு வரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுகிறார்கள். நெருக்கடி யால் பெரும்பா லான நேரங்களில் விபத்துக்களும் நேரிடுகிறது.

    போக்குவரத்து போலீ சார் பலர்வேறு பணி களுக்கு சென்று விடுவதால் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் பணியில் ஆள் இல்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

    விபத்துக்கள் அதிகரித்து வரும் வேளையில் இது போன்ற காரணங்களை காட்டாமல் பள்ளி மாணவ-மாணவிகளின் நலன் கருதி கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு தொடக்கப் பள்ளி முன்பு காலை மற்றும் மாலை வேளைகளில் போக்குவரத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று பெற்றோர்கள் பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×