search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பதிசாரம் குளத்தில் இன்று பேரிடர் தடுப்பு ஒத்திகை முன்னேற்பாடு பணிகள் - மழை வெள்ளத்தில் சிக்கியவரை மீட்பது குறித்து செயல்விளக்கம்
    X

    திருப்பதிசாரம் குளத்தில் இன்று பேரிடர் தடுப்பு ஒத்திகை முன்னேற்பாடு பணிகள் - மழை வெள்ளத்தில் சிக்கியவரை மீட்பது குறித்து செயல்விளக்கம்

    • மாநிலம் முழுவதும் வெள்ளம் குறித்த மாதிரி ஒத்திகை நிகழ்ச்சியினை வருகிற 1-ந் தேதி நடத்துவதற்கு உத்தரவிட்டு உள்ளது.
    • மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்.1077-ல் தொடர்பு கொண்டு பொதுமக்கள் விபரங்களை பெற்றுக் கொள்ளலாம்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்ப ட்டுள்ளதாவது:-

    தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய த்தின் வழிகாட்டுதலின் கீழ் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் மாநிலம் முழுவதும் வெள்ளம் குறித்த மாதிரி ஒத்திகை நிகழ்ச்சியினை வருகிற 1-ந் தேதி நடத்துவதற்கு உத்தரவிட்டு உள்ளது.

    அதன்படி கன்னியாகுமரி மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் மூலம் பெரு வெள்ள தடுப்பு குறித்த மாதிரி ஒத்திகை அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் சுசீந்திரம், பழையாறு சோழன் திட்டை, தோவாளை வட்டத்தில் திருப்பதிசாரம், கல்குளம் வட்டத்தில் வள்ளியாறு பாலம் இரணியல், விளவங்கோடு வட்டங்களில் தாமிரபரணி ஆற்றுப்பகுதி, குழித்துறை மற்றும் கிள்ளியூர் வட்டத்தில் பள்ளிக்கல் முஞ்சிறை ஆகிய 5 இடங்களில் 1-ந் தேதி நடைபெற உள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் அந்தந்த வட்டார மக்கள் கலந்து கொண்டு பேரிடர் காலங்களில் தங்களை தற்காத்து கொள்வது குறித்த தகவல்களை அறிந்து கொள்ளலாம். மேலும் மாவட்ட நிர்வாகத்தால் பயிற்சி பெற்ற முதல்நிலை மீட்பாளர்கள், பேரிடர் கால நண்பர்கள் (ஆப்தமித்ரா)ஆகியோர் பங்கு பெற்று தங்கள் பகுதியில் பேரிடர் மேலாண்மை நடைமுறைகளை சிறந்த முறையில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுத்திடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்.1077-ல் தொடர்பு கொண்டு பொதுமக்கள் விபரங்களை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூற ப்பட்டுள்ளது.

    இதனைத் தொடர்ந்து திருப்பதிசாரம் குளத்தில் இன்று முன்னேற்பாடு பணிகள் நடந்தன. இதில் அரசின் தீயணைப்பு, வருவாய், கல்வி, சுகாதாரம் மற்றும் பொதுப்பணித்துறை என அனைத்து துறை பணியாளர்களும் பங்கேற்ற னர். மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது எப்படி? என்பது குறித்து தீயணைப்புதுறையினர் செயல் விளக்கம் அளித்தனர். இதனை ஏராளமானோர் பார்த்து பயன் பெற்றனர்.

    Next Story
    ×