search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நவராத்திரி விழாவில் பங்கேற்று திரும்பிய சாமி சிலைகளுக்கு பக்தர்கள் வரவேற்பு
    X

    சுசீந்திரம் கோவிலை வந்தடைந்த முன்னுதித்த நங்கை அம்மனுக்கு தமிழக-கேரள போலீசார் அணிவகுப்பு மரியாதை அளித்த போது எடுத்த படம்

    நவராத்திரி விழாவில் பங்கேற்று திரும்பிய சாமி சிலைகளுக்கு பக்தர்கள் வரவேற்பு

    • முன்னுதித்த நங்கை அம்மன் இன்று சுசீந்திரம் வந்தடைந்தது
    • தமிழக-கேரள போலீசார் அணிவகுப்பு மரியாதை

    கன்னியாகுமரி:

    திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்க சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், தேவாரக்கட்டு சரஸ்வதி தேவி, வேளி மலை குமாரசுவாமி விக்கிர கங்கள் கடந்த 24-ந் தேதி பத்மநாபபுரத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றன.

    10 நாட்கள் நவராத்திரி விழாவுக்கு பிறகு சுவாமி விக்கிரகங்கள் 7-ந் தேதி அங்கிருந்து புறப்பட்டன. வழிநெடுக பக்தர்கள் திரண்டு சுவாமி விக்ரகங்களை வரவேற்றனர். 8-ந் தேதி காலையில் குமரி மாவட்ட எல்லை பகுதியான களியக்காவிளைக்கு சுவாமி விக்கிரகங்கள் வந்தடைந்தது.

    தொடர்ந்து குழித்துறை சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலயம்,இரவிபுதூர் கடை, சாமியார் மடம், காட்டாதுரை அம்மன் கோவில், அழகிய மண்டபம் , வைகுண்ட புரம், மணலி ஆகிய பகுதிகளில் பாரம்பரிய முறைப்படி சுவாமி விக்ரகங்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    வைகுண்டபுரத்தில் தொழிலதிபர் அழகி விஜி தலைமையில் வரவேற்பு கொடுக்கப்பட்டு பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மணலியில் கரை கண்டார் கோணம், சித்தி விநாயகர் கோவில் நிர்வாகிகள் சார்பில் சுவாமி விக்கிரகங்களுக்கு தால பொலியிட்டு வரவேற்பளிக்கப்பட்டது.

    இதில் கவுன்சிலர் உண்ணி கிருஷ்ணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து பத்மநாபபுரம் கோட்டைவாசல் முன் வரை 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் தால பொலிவுடன் தீபமேற்றி வரவேற்பளிக்கப்பட்டது.

    பத்மநாபபுரம் அர ண்மனை வாசல் முன் சுமார் ஒரு மணி நேரம் கொளுத்தும் வெயிலில் பொதுமக்கள் திரண்டு தால பொலியிட்டு சுவாமி விக்கிரகங்களுக்கு வரவேற்பு கொடுத்தனர். இதை தொடர்ந்து தேவாரக் கட்டு சரஸ்வதி அம்மன் சிறப்பு பூஜைகளுக்கு பின் மண்டபத்தில் அமர்த்தப் பட்டார். வேளிமலை குமாரசாமி, குமார கோவிலுக்கு புறப்பட்டு சென்றார். முன்னுதித்த நங்கை அம்மன் இன்று (திங்கட்கிழமை) காலையில் சுசீந்திரம் புறப்பட்டார். பக்தர்கள் சிறப்பான முறையில் வர வேற்பு கொடுத்த நிலை யில் மணலி முதல் பத்மநாதபுரம் அண்ணா சாலை முதல் பத்மநாபபுரம் வரை போக்குவரத்து நெருக்கடி அதிகமாக இருந்தது.

    இன்று காலை 9.30 மணிக்கு முன்னுதித்த நங்கை அம்மன், சுசீந்திரம் ரதவீதியை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து சுவாமி கோவிலை வந்தடைந்ததும், தமிழக-கேரள போலீசார் இசை கருவிகளை முழங்கி வரவேற்பு கொடுத்தனர். தொடர்ந்து அவர்கள் அணிவகுப்பு மரியாதையும் செய்தனர். அதன்பிறகு முன்னுதித்த நங்கை அம்மன் கோவிலுக்குள் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×