search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.2.22 கோடியில் வளர்ச்சித்திட்ட பணிகள் - கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு
    X

    ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.2.22 கோடியில் வளர்ச்சித்திட்ட பணிகள் - கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு

    • ரூ.6.90 லட்சம் மதிப்பில் நடைபெற்றுவரும் தூர்வாரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட் டது.
    • புதிதாக 4 கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணிகள் ஆய்வு செய்யப்பட்டன

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம், மேலசங்கரன் குழி ஊராட்சிக்குட்பட்ட பகுதி களில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணி களை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் நேரில் ஆய்வு மேற் ெண்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

    ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம், மேல சங்கரன்குழி ஊராட்சிக்குட் பட்ட ஆலடி குளம் குளத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் II திட்டத்தின் கீழ் ரூ.6.90 லட்சம் மதிப்பில் நடைபெற்றுவரும் தூர்வாரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட் டது.

    கன்னிமார் குளம் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட் டத்தின் கீழ் ரூ.13.62 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் பணி, பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.2.40 லட்சம் மதிப்பில் மேல சங்கரன்குழி ஊராட்சிக் குட்பட்ட பகுதியில் நடக்கும் பணி, விராலிவிளையில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் II திட்டத்தின்கீழ் ரூ.13.94 லட்சம் மதிப்பில் நடைபெற்றுவரும் விவசாய உற்பத்தி சேமிப்பு கிடங்கு ஆகியவை ஆய்வு செய்யப்பட்டது.

    மேலும் சாந்தபுரம் அரசு நடுநிலைப்பள்ளியில் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.6.49 லட்சம் மதிப்பில் பள்ளி வகுப்பறைகள் கட்டும் பணி, ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட் பட்ட இந்திரா முதல் ஆதிதிராவிட காலனி வரை ரூ.8.5 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, நாகர்கோவில் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் ரூ.27 லட்சம் மதிப்பில் களியங்காடு அரசு தொடக்கப்பள்ளியில் 3 புதிய வகுப்பறைகள் கட்டும் பணி, கோட்டார் கவிமணி தேசிக விநாயகம் அரசு தொடக்கப் பள்ளியில் ரூ.72 லட்சம் மதிப்பில் 5 புதிய வகுப்பறைகள் கட்டும் பணி, ரூ.71.25 லட்சம் மதிப்பில் புதிதாக 4 கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணிகள் ஆய்வு செய்யப்பட்டன. மேலும் பணிகளை விரைந்து முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, செயற்பொறியாளர் ஹசன் இப்ராகிம், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கனக பாய், புனிதம், ராஜா, ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் அய்யப்பன், மேலசங்கரன்குழி ஊராட்சி முத்துசரவணன், மாநகர்மன்ற உறுப்பினர் செல்வகுமார் உட்பட துறைசார்ந்த அலுவ லர்கள், உள்ளாட்சி பிரதிநி திகள் பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×