என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மார்த்தாண்டத்தில் குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
    X

    மார்த்தாண்டத்தில் குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

    • பல பகுதிகளில் மழைக்காலங்களில் தண்ணீர் நிரம்பி குளம் போல் காட்சி அளிக்கிறது.
    • அவசர காலத்தில் ஆம்புலன்சில் கொண்டு போகும் நோயாளிகள் காலதாமதமாகி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர்

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சிக்குட்பட்ட மார்த் தாண்டம் பகுதி மிகப் பெரிய வர்த்தக நகரம் ஆகும். இங்கு 24 மணி நேரமும் வாகனங்கள் அதிக அளவில் வந்து செல்கின்றன. இதனால் எப்போதும் மார்த்தாண்டம் நகரப்பகுதி நெருக்கடி நிறைந்து பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.

    இங்குள்ள மேம்பாலத்தின் அடிப்ப குதியில் செல்லும் தேசிய நெடுஞ்சாலை தமிழகம் மற்றும் கேரளா மாநிலத்தை இணைக்கும் தேசிய நெடுஞ் சாலை ஆகும். இந்த சாலை பம்பம் பகுதியில் இருந்து வெட்டுமணி வரை முற்றிலும் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது.பல பகுதிகளில் மழைக்காலங்களில் தண்ணீர் நிரம்பி குளம் போல் காட்சி அளிக்கிறது.

    இதனால் இரவு நேரங் களில் வாகன விபத்துக்கள் ஏற்படுகின்றன. பகல் நேரங்களில் வாகனங்கள் ஆமை வேகத்தில் செல்வ தால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் அரசு பணிக்கு செல்லும் அரசு ஊழியர்கள் பள்ளி கல்லூரியில் பயி லும் மாணவ-மாணவி கள் வியாபாரிகள் கடும் சிரமத்திற்கும், துன்பத்திற் கும் உள்ளாகின்றனர்.

    அவசர காலத்தில் ஆம்புலன்சில் கொண்டு போகும் நோயாளிகள் காலதாமதமாகி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகின் றனர். இதனால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது.

    கேரளா மாநிலத்தில் ஓணம் பண் டிகை வருவதால் கேரள மக்கள் வணிக நிறுவனங்களுக்கும், மார்த்தாண்டம் காய்கறி சந்தைக்கும் பொருட் கள் வாங்க வரும்போது மேலும் நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கையை தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் எடுக்க வேண்டும் நடவடிக்கை எடுக்கத்தவறும் பட்சத்தில் நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலை கோட்ட அலுவலகம் முன்பாக மார்த்தாண்டம் நகர வர்த்தக சங்கம் சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கூறிய மார்த்தாண் டம் நகர வர்த்தக சங்க தலைவர் தினகர் தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு மனுவும் அனுப்பி உள்ளார்.

    Next Story
    ×