search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் சுயதொழில் தொடங்க கடன் உதவி
    X

    குமரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் சுயதொழில் தொடங்க கடன் உதவி

    • கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
    • சுய வேலைவாய்ப்பு திட்டத்தில் பயனாளிகளின் எண்ணிக்கையில் 25 சதவீதம் தாட்கோ மூலம் பயிற்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை

    நாகர்கோவில்

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வாயிலாக நிலம் வாங்குதல் திட்டமானது ஆதிதிராவிடர் பெண்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்கு என உருவாக்கப்பட்டு, அவர்க ளின் நிலஉடைமையை அதிகரிக்கும் பொருட்டு இத்திட்டம் செயல்ப டுத்தப்பட்டு வருகிறது.

    பெண்கள் இல்லாத குடும்பங்களில் கணவர் அல்லது மகன்க ளுக்கு வழங்கப்ப டும். இத்திட்ட த்தில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் விவசாயத்தை தொழிலாக கொண்டவராகவும், 18-65 வயதிற்குள்ளாகவும் இருக்க வேண்டும். விண்ணப்பம் செய்த மகளிர் அல்லது மகன்கள் அல்லது கணவர் பெயரில் மட்டுமே வாங்கப்படும் நிலம் பதிவு செய்யப்பட வேண்டும்.

    இத்திட்டத்தின்கீழ் வழங்கப்படும் நிலங்களுக்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் அற்றும் பதிவு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படும். மேலும், நிலம் மேம்படுத்துதல் (இரு பாலருக்கும்) திட்டத்தின்கீழ் ஆழ்குழாய் கிணறு, திறந்த வெளி கிணறு, பம்பு செட் அமைத்தல், குழாய் அமைத்தல், சொட்டுநீர் பாசனம் மற்றும் சுழல்முறை நீர்பாசனம் அமைத்தல் போன்றவற்றிற்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் விவசாயத்தை தொழிலாக கொண்டவராகவும், 18-65 வயதிற்குள்ளாகவும் இருக்க வேண்டும். ஆதிதிராவடர் விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு பெற்றுத்தந்திட முன்னுரிமை அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற வயது வரம்போ, குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்போ ஏதும் இல்லை. தொழில் முனைவோர் திட்டம் – சிறப்புத்திட்டமானது பெட்ரோல், டீசல், எரிவாயு சில்லறை விற்பனை நிலையம் அமைப்ப தற்கானது. இத்திட்டத்தில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எண்ணெய் நிறுவனத்தால் அவ்வபோது நிர்ணயம் செய்யப்படும் வயது வரம்பு, கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். தொழில் முனைவோர் திட்டத்தில் இணையும் விண்ணப்பதாரர் ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்த 18-–65 வயத்திற்குள்ளவராகவும், தாட்கோ திட்டத்தின்கீழ் இதுவரை மானியம் ஏதும் பெற்றிருக்கக் கூடாது. இத்திட்டத்தின்கீழ் உருவாக்கப்படும் சொத்து விண்ணப்பதாரரின் பெயரில் மட்டுமே பதிவு செய்யப்பட வேண்டும்.

    இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டத்தில் பயனாளிகளின் எண்ணிக்கையில் 25 சதவீதம் தாட்கோ மூலம் பயிற்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விண்ணப்பதாரர் தொழில் புரிவதற்காக கடன் மற்றும் மானியம் பெறப்பட்ட மாவட்டத்திலேயே தொழில்புரிய வேண்டும். மகளிர் சுய உதவி குழுக்களுக்கான பொருளாதார கடனுதவி திட்டத்தில் குழு உறுப்பினர்கள் ஆதிதிராவிடர் மகளிர் 18-– 65 வயதுவரை உடையவராக இருக்கலாம். இதுவரை அரசு மானியம் பெறாத குழுவாகவும் இருக்க வேண்டும், சுழல்நிதி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் பல்வேறு திட்டங்கள் இத்துறையின் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டங்களில் பயன்பெற விரும்ப முள்ள வர்கள் ஆதிதிராவிடர்கள் http://application.tahdco.com என்ற இணையதளத்திலும், பழங்குடியினர் எனில் http://fast.tahdco.com என்ற இணையதளத்திலும் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும், விவரங்களுக்கு மாவட்ட மேலாளர் தாட்கோ, மாவட்ட கலெக்டர் அலுவலகம், நாகர்கோவில் முகவரியிலும், தொலைபேசி எண் 04652-220532, அலைபேசி எண் 94450 29468 ஆகியவற்றிலும் தொடர்பு கொள்ளலாம். கன்னியாகுமரி மாவட்டத்தில் 2021-23-ம் ஆண்டில் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் 52 பயனாளிகளுக்கு ரூ.66.6 கோடி மதிப்பில் அரசு மானியத்துடன் கூடிய ரூ.2.16 கோடி மதிப்பிலான கடனுதவியும், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 46 பயனாளிகளுக்கு ரூ.44.04 லட்சம் அரசு மானியத்துடன் கூடிய ரூ.1.87 கோடி மதிப்பிலான கடனுதவியும், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் (மருந்தகம்) கீழ் 1 பயனாளிக்கு ரூ.2.25 லட்சம் அரசு மானியத்துடன் கூடிய ரூ.10 லட்சம் மதிப்பிலான கடனுதவியும், நிலம் வாங்கும் திட்டத்தின் கீழ் 1 பயனாளிக்கு ரூ.1.80 லட்சம் அரசு மானியத்துடன் கூடிய ரூ.3.60 லட்சம் மதிப்பிலான கடனுதவியும் வழங்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×