search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
    X

    புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

    • பிறரோடு ஓப்பிடாமல், தங்களுக்குள் இருக்கும் திறமைகளை வெளிக்கொணர வேண்டும்
    • மாணவர்களுக்கு இஸ்ரோ விஞ்ஞானி ஆசீர் பாக்கியராஜ் அறிவுரை

    நாகர்கோவில்,

    சுங்கான்கடை புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியின் 21-வது பட்டமளிப்பு விழா கல்லூரியின் ஆட்சிமன்றக் குழு தலைவரும் குழித்துறை மறைமாவட்ட தொடர்பாள ருமான இயேசுரத்தினம் தலைமையில் நடந்தது. தாளாளர் மரிய வில்லியம் முன்னிலை வகித்தார்.

    துணை முதல்வர் கிறிஸ்டஸ் ஜெயசிங் வர வேற்று பேசினார். முதல்வர் மகேஸ்வரன் அறிக்கை சமர்ப் பித்தார். விழாவில் சந்திர யான் விண்வெளி ஆய்வு திட்டத்தில் முக்கிய பங்காற்றிய மகேந்திரகிரி இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைமை இயக்குநர் ஆசிர் பாக்கிய ராஜ் பங்கேற்று 512 பேருக்கு பட்டங்கள் வழங்கினார். விழாவில் 8 பேருக்கு ஆராய்ச்சிக்கான முனைவர் பட்டங்களும், 127 பேருக்கு முதுநிலை பொறியியல் பட்டங்களும், 377 பேருக்கு இளநிலை பொறியியல் பட்டங்களும் வழங்கப்பட் டன.

    தொடர்ந்து விஞ்ஞானி ஆசிர் பாக்கியராஜ் பேசும் போது, பட்டதாரிகளுக்கு நான் கூறுகின்ற அறிவுரை என்ன வென்றால் 'உனக்கு நிகர் நீ. பிறரோடு உன்னை ஒப்பிடுவதை விட்டுவிட்டு உன்னில் இருக்கும் திறமை களை வெளிக்கொணர வேண்டும் என்பதேயாகும்.நீங்கள் எந்த நிலையில் உயர்ந்தாலும் உங்கள் பெற் றோரையும் ஆசிரியர்களை யும் மதித்து செயல்பட வேண்டும் என்றார்.

    கல்லூரி ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, புல முதல்வர்கள், துறை தலைவர்கள், பேரா சிரியர்கள், பணியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் விழாவில் கலந்து கொண்ட னர்.

    விழா ஏற்பாடுகளை பேராசிரியர்கள் மற்றும் அனைத்து பணியாளர்கள் இணைந்து செய்திருந்தனர்.

    Next Story
    ×