என் மலர்
உள்ளூர் செய்திகள்

குழித்துறையில் காங்கிரஸ் கொடியை எரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
- போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு
- பாரதிய ஜனதா கட்சி ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் கொடியை நிர்வாகிகள் எரித்து உள்ளனர்
நாகர்கோவில் :
குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால் சிங் தலைமையில் நிர்வாகிகள், நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
குழித்துறை சந்திப்பில் நடந்த பாரதிய ஜனதா கட்சி ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் கொடியை நிர்வாகிகள் எரித்து உள்ளனர். இது மிகவும் கண்டனத்துக்குரியது. காங்கிரஸ் கொடியை எரித்த நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர். நாகர்கோவில் மாநகர் மாவட்ட தலைவர் நவீன்குமார், மாவட்ட துணைத்தலைவர் பால்மணி,ஜோன்ஸ் இம்மானு வேல், நகர தலை வர்கள் ஜெகன், குமார் வக்கீல் பிரிவு தலைவர் ஜெபஸ்டின், வட்டாரத் தலைவர் டென்னிஸ், இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர்திவாகர் மற்றும் நிர்வாகிகள்மனு கொடுக்க வந்திருந்தனர்.
Next Story






