search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரசார் பாதயாத்திரை
    X

    கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரசார் பாதயாத்திரை

    • 75-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு இன்று தொடங்கியது
    • நட்டாலம் வழியாக விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குள் பாதயாத்திரை தொடர்ந்து நடைபெறுகிறது.

    கன்னியாகுமரி:

    75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதயாத்திரை இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இந்தப் பாத யாத்திரை நிகழ்ச்சிக்கு குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டாக்டர்.பினுலால் சிங் தலைமை தாங்கினார். நிகழ்ச்சிக்கு வட்டார தலைவர்கள் கிறிஸ்டோபர், பால்ராஜ், டென்னிஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பாதயாத்திரை நிகழ்ச்சியை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். தேர்தல் பொறுப்பாளர் சனல்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்தப் பாதயாத்திரை இன்று காலை 9 மணி அளவில் கொல்லங்கோடு கண்ணநாகம் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டு ஊரம்பு, நடைக்காவு வழியாக மதியம் நித்திரவிளை வந்தடைகிறது. பின்னர் மாலை 4 மணி முதல் நித்திரவிளையிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு சின்னத்துறை, தூத்தூர், பூத்துறை, விரிவிளை, மங்காடு, முஞ்சிறை வழியாக புதுக்கடை பேருந்து நிலையம் வந்தடையும். இத்துடன் முதல் நாள் பாதயாத்திரை புதுக்கடையில் நிறைவடைகிறது. பின்னர் புதுக்கடையில் உள்ள ஜே.ஆர். மஹாலில் அனைவரும் தங்குகின்றனர்.

    2-ம் நாள் பாதயாத்திரை நாளை (10-ந்தேதி) காலை 8 மணிக்கு புதுக்கடை பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி கைசூண்டி, கூட்டாலுமூடு, தேங்காப்பட்டணம், கீழ்குளம், புத்தன் துறை, இனையம், பாரக்கான் விளை வழியாக மதியம் தொழிக்கோடு வந்தடையும். பின்னர் அங்கு மதிய உணவு வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு தொழிக்கோடு பகுதியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு தெருவுக்கடை, கருங்கல், மூசாரி, பாலூர், தொலையாவட்டம் வந்தடை யும். பின்னர் தெய்வப்பனவிளையில் அனைவரும் தங்குகின்றனர்.

    இதனை அடுத்து 3-ம் நாள் பாதயாத்திரை நாளை மறுநாள் (11-ந்தேதி) காலை 8 மணிக்கு தொலையா வட்டத்தில் இருந்து ஆரம்பிக்க ப்பட்டு முள்ளங்கி னாவிளை, நட்டாலம் வழியாக விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குள் பாதயாத் திரை தொடர்ந்து நடைபெறுகிறது.

    இந்த பாத யாத்திரையில் மாநில மீனவர் அணி தலைவர் ஜார்ஜ் ராபின்சன், மாநில பொதுச் செயலாளர் பால்ராஜ், கிள்ளியூர் யூனியன் சேர்மன் கிரிஸ்டல் ரமணி பாய், மாநில பொதுக்குழு உறுப்பினர் டைட்டஸ், கொல்லங்கோடு நகர காங்கி ரஸ் கமிட்டி தலைவர் ரெஜீஸ், மாவட்ட நிர்வாகிகள் அருளானந்தன், ஸ்டீபன், டென்னிஸ், அசோகன், ராஜேந்திரகுமார், ரசல் ராஜ், கொல்லங்கோடு கவுன்சிலர் ஜெரோம் உட்பட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் பலர் திரளாக இந்த பாதயாத்திரையில் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×