என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  குமரி மாவட்டத்தில் 100 இடங்களில் காங்கிரஸ் கொடியேற்ற வேண்டும்
  X

  விஜய்வசந்த் எம்.பி. பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசிய பேச்சை தமிழாக்கம் செய்யப்பட்ட நூலை வெளியிட்டபோது எடுத்த படம் 

  குமரி மாவட்டத்தில் 100 இடங்களில் காங்கிரஸ் கொடியேற்ற வேண்டும்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நாகர்கோவில் மாநகர பகுதியில் காங்கிரஸ் நிர்வாகிகளின் சொந்த இடங்களில் கொடியேற்ற வேண்டும்
  • மாநகர மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்

  நாகர்கோவில்:

  நாகர்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வெட்டூர்ணிமடத்தில் உள்ள எம்.பி. அலுவலகத்தில் இன்று காலை நடந்தது.

  கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட தலைவர் நவீன் குமார் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக விஜய்வசந்த் எம்.பி. கலந்து கொண்டு பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசிய பேச்சை தமிழாக்கம் செய்யப்பட்ட நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.

  கூட்டத்தில் முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் டைசன், மாணவர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் பிரவீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் 100 இடங்களில் காங்கிரஸ் கொடி ஏற்றுவது, நாகர்கோவில் மாநகர பகுதியில் காங்கிரஸ் நிர்வாகிகளின் சொந்த இடங்களில் கொடியேற்றுவது,

  ஞாயிற்றுக்கிழமை தோறும் தெருமுனை கூட்டங்கள் நடத்துவது, மாதத்திற்கு ஒருமுறை வார்டு நிர்வாகிகள் கூட்டம் நடத்துவது, தியாகிகளை கவுரவிப்பது தொடர்பாக தியாகிகள் பிறந்தநாள், நினைவு நாளில் சிறப்பாக கொண்டாடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  இதில் மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் சிவபிரபு, கவுன்சிலர் பால அகியா, நிர்வாகிகள் சுந்தர், கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×