search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுதந்திர தின விழாவில் கலெக்டர் ஸ்ரீதர் தேசிய கொடியேற்றினார்
    X

    சுதந்திர தின விழாவில் கலெக்டர் ஸ்ரீதர் தேசிய கொடியேற்றினார்

    • ரூ. 2 ¼ கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன
    • நாகர்கோவிலில் அண்ணா விளையாட்டு அரங்கில் நடந்தது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்ட ரங்கத்தில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் இன்று நடந்தது. விழாவில் கலெக்டர் ஸ்ரீதர் தேசிய கொடி ஏற்றி வைத்தார்.

    இதைத்தொடர்ந்து திறந்த ஜீப்பில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்துடன் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதை பார்வையிட்டார்.

    பின்னர் கலெக்டர் ஸ்ரீதர் சமாதான புறாக்களை பறக்க விட்டார். இதைத்தொடர்ந்து மூவர்ண கலரிலான பலூன்களும் பறக்க விடப்பட்டது.

    கலெக்டர் ஸ்ரீதர் ஆயுதப்படை போலீசார், தீயணைப்பு வீரர்கள், ஊர்க்காவல் படை, என்.சி.சி. மாணவர்கள், என்.எஸ்.எஸ். மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண் டார்.

    சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் ஸ்ரீதர் வழங்கினார். 87 போலீசாருக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது.

    பின்னர் மாற்றுத்தி றனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.1 லட்சத்து 85 ஆயிரத்து 90 மதிப்பில் 5 பயனாளிகளுக்கு செயற்கை கால் வழங்கப்பட்டது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தையல் எந்திரங்க ளும், திரும ணமாகாத பெண்களுக்கு உதவி தொகை ஆதரவற்ற விதவை உதவித்தொகை ஆகியவற்றை கலெக்டர் ஸ்ரீதர் வழங்கினார்.

    வருவாய்த்துறையில் சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் ஸ்ரீதர் வழங்கினார். ஊரக வளர்ச்சி முகமை, மருத்துவத்துறை, பொது சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை, மீன்வளத்துறை, சமூக நலத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தோட்டக்கலை மற்றும் மலை பயிர் துறை, வேலைவாய்ப்பு பயிற்சி துறையில் சிறப்பாக பணிபுரிந்து அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பள்ளி கல்வித்துறை, தீயணைப்பு துறை மேலாண்மை மற்றும் உழவர் நலத்துறை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சுற்றுலாத்துறை பதிவுத்துறை ஆகியவற்றில் சிறப்பாக பணிபுரிந்த அதிகாரிகளுக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    குமரி மாவட்ட வனப்பகுதியில் சுற்றித்திரிந்த புலியை பிடித்த வன அதிகாரிகளுக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    களியல் வனசரகர், வனக்காப்பாளர், வேட்டை தடுப்பு காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் ஸ்ரீதர் வழங்கினார். வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளில் நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களும் ஊக்கப்ப டுத்தப்பட்டனர். விழாவில் 40 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 30 லட்சத்து 45 ஆயிரத்து 870 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    இதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி நடந்தது. சுதந்திர தின விழாவை ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த 2 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் கண்டு களித்தனர்.

    விழாவில் விஜய் வசந்த் எம்.பி., மாவட்ட வருவாய் அதிகாரி பாலசுப்பி ரமணியன், மருத்துவ பணிகள் துணை இயக்குனர் மீனாட்சி, ஆசாரி ப்பள்ளம் மருத்துவ கல்லூரி முதல்வர் பிரின்சி பயாஸ், முதன்மை கல்வி அதிகாரி முருகன், செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ஜான் ஜெகத் பிரைட் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×