search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் புதிய ரவுண்டானா அமைக்கப்படும் இடத்தில் கலெக்டர்-மேயர் இன்று ஆய்வு
    X

    நாகர்கோவிலில் புதிய ரவுண்டானா அமைக்கப்படும் இடத்தில் கலெக்டர்-மேயர் இன்று ஆய்வு

    • ரவுண்டானா மற்றும் கழிவு நீர் ஒடை அமைக்க ரூ.1.50 கோடியில் டெண்டர் பிறப்பிக்கப்பட்டது
    • கலெக்டர் அரவிந்த், மேயர் மகேஷ் ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலக சாலையில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வந்தது. இதை குறைக்கும் வகையில் அந்த சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு இருவழி பாதையாக மாற்றப்பட்டது.

    இதைத் தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தின் முன் பகுதியில் ரவுண்டானா அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ரவுண்டானா மற்றும் கழிவு நீர் ஒடை அமைக்க ரூ.1.50 கோடியில் டெண்டர் பிறப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து பணிகள் தொடங்கப்பட்டது.

    பழைய ரவுண்டானா ஜே.சி.பி. எந்திரம் மூல மாக அகற்றப்பட்டது. அதிலிருந்த சுதந்திர தின விழா ஸ்தூபி மற்றும் உயர் கோபுர மின் விளக்குகள் மாற்றி வைக்கப்பட்டு உள்ளன.

    இந்த நிலையில் இன்று ரவுண்டானா அமைப்பத ற்கான பணிகள் தொடங்க ப்பட்டு உள்ளது. முதற்கட்ட மாக சாக்கு மூடைகளில் மணல் நிரப்பி ரவுண்டா னாவின் மாதிரி தோற்றம் அமைக்கப்பட்டு உள்ளது.பரிட்சார்த்த முறையில் 3 நாட்கள் வாகனங்களை இயக்க நடவடிக்கை எடுக்க ப்பட்டு உள்ளது. அதன் பிறகு ரவுண்டானா அமைக்கப்பட உள்ளது. ரவுண்டானாவின் வடக்கு பக்கத்தில் 10 மீட்டர் நீளத்திற்கும் கிழக்கு பக்கத்தில் 18 மீட்டர் நீளத்திற்கும் மேற்கு பக்கத்தில் 20 மீட்டர் நீளத்திற்கும் வாகனங்கள் எந்த ஒரு நெருக்கடியும் இன்றி செல்லும் வகையில் ஆம்ஸ் (தடுப்பு)அமைக்கவும் நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதிய ரவுண்டானா பணி தொடங்கப்பட்டதையடுத்து அந்த பணியை கலெக்டர் அரவிந்த், மேயர் மகேஷ் ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வின் போது ஆணையாளர் ஆனந்த மோகன் மற்றும் கவுன்சிலர்கள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×