என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தக்கலையில் நள்ளிரவில் இரு தரப்பினர் மோதல்
  X

  தக்கலையில் நள்ளிரவில் இரு தரப்பினர் மோதல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வீடுகள் சூறை- மோட்டார் சைக்கிள்கள் தீவைத்து எரிப்பு
  • வேன் கண்ணாடி உடைப்பு

  கன்னியாகுமரி:

  தக்கலை அருகே உள்ள காட்டாத்துறையைச் சேர்ந்தவர் கணேஷ் (வயது 25), தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அனீஸ் (27) என்பவருக்கும் தகராறு இருந்து வந்தது.

  இந்த முன் விரோதத்தில் நேற்று இரவு 10 மணியளவில் கணேஷ் தனது நண்பர்கள் எட்வின் ராபர்ட் (30), சுரேஷ்பாபு (29) ஆகியோருடன் அனீஷ் வீட்டிற்கு சென்றார். அங்கு வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்களை அவர்கள் சேதப்படுத்திய தோடு தீ வைத்தும் எரித்த னர்.

  இதனைக் கண்ட அனீஸ் வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்தார். அப்போது அவர் மீதும் கணேஷ் தரப்பினர் தாக்குதல் நடத்தினர். அவரும் பதிலுக்கு தாக்கி உள்ளார். தொடர்ந்து அந்த பகுதி மக்கள் திரண்டு வரவே, கணேஷ் கும்பல் அங்கிருந்து தப்பி ஒடியது. அப்போது அங்கு நின்ற வேன் கண்ணாடிகளையும் உடைத்துச் சென்றனர்.

  இந்த சம்பவம் அனீஸ் தரப்பினருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அனீஸ் அவரது உறவினர்கள் சபீன், சுஜி ஆகியோர் நள்ளிரவு 12 மணியளவில், கணேஷ் வீட்டுக்குச் சென்று அங்கி ருந்த பொருட்களை அடித்து உடைத்து சூறையாடினர்.

  மேலும் வீட்டில் இருந்த புறாக் கூண்டுகளையும் சேதப்படுத்தினர். இதனால் அந்தப் பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. இதுகுறித்து தக்கலை போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.

  அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர். போலீசாரை கண்டதும் மோதலில் ஈடுபட்ட கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், அனீஸ் மற்றும் கணேசை கைது செய்தனர். மற்ற 4 பேரை தேடி வருகின்றனர். இரவு நேரத்தில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட இந்த மோதல் சம்பவம் அந்த பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

  Next Story
  ×