என் மலர்
உள்ளூர் செய்திகள்

குலசேகரம் அருகே பெண்ணிடம் பணம்-செல்போன் பறிப்பு
- கன்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்து மர்ம நபரை தேடி வரு கிறார்கள்.
- ரூ.20 ஆயிரம் மதிப்பிலான செல்போன் வைத்திருந்ததாக புகாரில் தெரிவித்துள்ளார்
திருவட்டார் :
குலசேகரம் அருகே மணியன்குழி பகுதியை சேர்ந்தவர் ஷேக் முகமது. இவர் பேக்கரி கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அசின் (வயது 30).
நேற்று மாலை குலசேகரம் சந்தைப் பகுதியில் இருந்து மணியன்குழிக்கு செல்வதற்கு 2 மகள்களுடன் பஸ்சுக்காக காத்து இருந்தார்.
அப்போது மணியன் குழி செல்வதற்கு ஒரு வேன் வந்தது. அதில் ஏறும் போது மர்ம நபர் ஒருவர் அசின் கையில் இருந்த பர்சை அபேஸ் செய்து விட்டார். வேனில் இருந்து இறங்கிய அசின், பர்சை காணாது அதிர்ச்சி அடைந்தார்.
உடனே குலசேகரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். பர்சில் ரூ.5 ஆயிரம் மற்றும் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான செல்போன் வைத்திருந்ததாக புகாரில் தெரிவித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் அந்த பகுதியில் சென்று தீவிர விசாரணை மேற்கொண்ட னர்.
அந்த பகுதியில் கடையில் உள்ள கன்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்து மர்ம நபரை தேடி வருகிறார்கள்.






