search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருங்கல் அருகே அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாக லாரி டிரைவர்-உரிமையாளர் மீது வழக்கு
    X

    கருங்கல் அருகே அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாக லாரி டிரைவர்-உரிமையாளர் மீது வழக்கு

    • அதிகமாக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களை சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்
    • லாரி டிரைவர் எதிர்ப்பு தெரிவித்து தகாத வார்த்தைகள் பேசி அரசு பணி செய்யவிடாமல் தடுத்துள்ளார்.

    கன்னியாகுமரி :

    கன்னியாமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு அளவுக்கு அதிகமாக கனிம வளம் ஏற்றிச் செல்லும் லாரிகளை சோதனையிடும் பணி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடை பெற்று வருகிறது.

    கருங்கல் அருகே மானான்விளை பகுதியில் கல்குளம் தாலுகா சமூக பாதுகாப்பு திட்டம் தனி வட்டாட்சியர் ரமேஷ் தலைமையிலான குழுவினர் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களை சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அதிக பாரம் ஏற்றி வந்த லாரியை அவர்கள் தடுத்து நிறுத்தி சோதனை யிட்டனர்.

    பின்னர் லாரியை எடை போடுவதற்காக லாரியுடன் உதவியாளர் அசோக்குமார் என்பவரை தனி வட்டாட்சி யர் ரமேஷ் அனுப்பி வைத்தார். இதற்கு லாரி டிரைவர் எதிர்ப்பு தெரிவித்து அசோக்குமாரை தகாத வார்த்தைகள் பேசி அரசு பணி செய்யவிடாமல் தடுத்துள்ளார்.

    இது சம்பந்தமாக தனி வட்டாட்சியர் ரமேஷ் கருங்கல் போலீசில் புகார் செய்தார். இப்புகாரின் பேரில் லாரி ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் மீது கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×