search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்ற 28 பேர் மீது வழக்கு
    X

    குமரி மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்ற 28 பேர் மீது வழக்கு

    • 600 மது பாட்டில்கள் பறிமுதல்
    • நாகர்கோவில், தக்கலை, குளச்சல், கன்னியாகுமரி சப்-டிவிஷனுக்குட்பட்ட பகுதிகளில் அதிரடி சோதனை

    நாகர்கோவில் :

    தொழிலாளர் தினத்தை யொட்டி டாஸ்மாக் கடை கள் நேற்று மூடப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து அனுமதி இன்றி குமரி மாவட்டத்தில் மது விற்பனை செய்வதாக வந்த புகாரை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    ராஜாக்கமங்கலம் பகுதி யில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது அனுமதி இன்றி மது விற்பனை செய்து கொண்டி ருந்த பரமார்த்தலிங்கம் என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 20 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஆலங்கோட்டை பகுதியில் மது விற்ற நாகராஜன் என்பவரை கைது செய்த வுடன் அவரிடம் இருந்து 25 மது பாட்டில்களையும், ஈத்தங்காடு பகுதியில் மது விற்ற நாகராஜன் என்ப வரை போலீசார் கைது செய்தனர். இவரிடமிருந்து 111 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    சுசீந்திரம் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி தலைமையிலான போலீ சார் என்.ஜி.ஓ.காலனி ஒத்தக்கடை பகுதியில் ரோந்து சென்றபோது அங்கு மது பாட்டில்கள் விற்பனைக்கு வைத்திருந்த கன்னியாகுமரி குண்டலை சேர்ந்த சண்முகசுந்தரம் (36) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 34 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேபோல் நாகர்கோவில், தக்கலை, குளச்சல், கன்னியாகுமரி சப்-டிவிஷனுக்குட்பட்ட பகுதிகளில் போலீசாரின் அதிரடி சோதனை நடத்தினர்.

    அனுமதியின்றி மது விற்பனை செய்த 28 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 600 மது பாட்டில் களை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×