என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் 2 நகை கடையை உடைத்து கொள்ளை முயற்சி - சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றி போலீஸ் விசாரணை
    X

    நாகர்கோவிலில் 2 நகை கடையை உடைத்து கொள்ளை முயற்சி - சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றி போலீஸ் விசாரணை

    • முத்ரா, ஷேக் ஆகிய இருவரின் நகைக்கடையின் ஷட்டர் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்
    • கடையில் சிறிது நேரம் மோப்பம் பிடித்து விட்டு அந்த பகுதியில் ஓடிய நாய் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மீனாட்சி புரம் பகுதியை சேர்ந்தவர் முத்ரா. பறக்கை பகுதியைச் சேர்ந்தவர் ஷேக்.

    இவர்கள் இருவரும் நாகர்கோவில் அலெக்சாண்டரா பிரஸ் ரோட்டில் நகை கடை வைத்துள்ளனர். இவர்களது நகைக் கடையும் எதிரெதிரே உள் ளது. நேற்று இரவு இருவரும் வழக்கம்போல் நகைக் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றனர்.

    இன்று காலையில் கடைக்கு வந்தபோது முத்ரா, ஷேக் ஆகிய இருவரின் நகைக்கடையின் ஷட்டர் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

    மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. கடையில் சிறிது நேரம் மோப்பம் பிடித்து விட்டு அந்த பகுதியில் ஓடிய நாய் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் அங்கு வந்து கடை ஷட்டரில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். நகை கடை அடுத்தடுத்து நடந்த கொள்ளை முயற்சி சம்ப வம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

    இது தொடர்பாக இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவின் காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மக்கள் நட மாட்டம் மிகுந்த பகுதியில் கொள்ளையர்கள் கைவ ரிசை காட்டி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தி உள்ளது.

    Next Story
    ×