search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழை குறைந்ததையடுத்து திற்பரப்பு அருவியில் 10 நாட்களுக்கு பிறகு குளிக்க அனுமதி
    X

    மழை குறைந்ததையடுத்து திற்பரப்பு அருவியில் 10 நாட்களுக்கு பிறகு குளிக்க அனுமதி

    • பெருஞ்சாணி அணை 70 அடியை எட்டியது
    • மாம்பழத்துறையாறு அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொட்டித் தீர்த்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் வேகமாக நிரம்பியது.

    மாம்பழத்துறையாறு அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. சிற்றாறு அணை நிரம்பி யதையடுத்து அணையில் இருந்து உபரிநீர் வெளியேற் றப்பட்டது. அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீரின் காரணமாக கோதையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

    திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் கடந்த 10 நாட்களாக அருவியில் குளிப்ப தற்கு தடை விதிக்கப் பட்டு இருந்தது. இந்த நிலை யில் கடந்த 2 நாட்களாக மழை சற்று குறைந்துள்ளது. இதையடுத்து அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து குறைய தொடங்கியுள்ளது. இதனால் சிற்றாறு அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் நிறுத்தப்பட்டுள்ளது.

    அணையிலிருந்து வெளி யேற்றப்பட்ட உபரிநீர் நிறுத்தப்பட்டுள்ளதால் கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கும் படிப் படியாக குறைந்து வருகிறது. திற்பரப்பு அருவி யிலும் ஏற்பட்ட வெள்ளப்பெ ருக்கு குறைந்து மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. அணையில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருவதை யடுத்து 10 நாட்களுக்கு பிறகு குளிப்ப தற்கு விதிக்கப்பட்டி ருந்த தடை நீக்கப்பட்டது.

    இன்று அருவியில் குளிப்ப தற்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராள மானோர் அருவியில் குளிப்ப தற்கு வந்திருந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்த குளிய லிட்டு மகிழ்ந்தனர்.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் நிரம்பி வருவதையடுத்து பொதுப் பணித்துறை அதிகா ரிகள் அணையின் நீர்மட் டத்தை கண்காணித்து வருகிறார்கள்.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 40.69 அடியாக உள்ளது. அணைக்கு 610 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 230 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் இன்று காலை 70 அடியை எட்டியது. அணைக்கு 449 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 250 கன அடி தண்ணீர் வெளியேற்றப்ப டுகிறது. மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் முழு கொள்ளளவான 54.12 அடியை எட்டி நிரம்பி வழி கிறது.

    முக்கடல் அணை நீர்மட்டம் 24.20 அடியாக உள்ளது. நாளைக்குள் முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நாகர்கோவில் நகர மக்களுக்கு புத்தன் அணையிலிருந்து கொண்டு வரப்படும் தண்ணீரை சப்ளை செய்து வருகிறார்கள். முக்கடல் அணை நிரம்பி வருவதையடுத்து முக்கடல் தண்ணீரை சப்ளை செய்வ தற்கு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

    Next Story
    ×