search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கண்ணணூர் அருகே காலாவதியான பொருட்களை சாலையில் கொட்டிய பேக்கரி கடைக்கு அபராதம்
    X

    சாலையோரம் கொட்டிய காலாவதியான பேக்கரி பொருட்கள்

    கண்ணணூர் அருகே காலாவதியான பொருட்களை சாலையில் கொட்டிய பேக்கரி கடைக்கு அபராதம்

    • காலாவதியான பொருட்களை கண்டறிந்து அழிக்க வேண்டும்
    • பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை

    கன்னியாகுமரி:

    கண்ணணூர் ஊராட்சிக்குட்பட்ட வீராலிகாட்டு விளை பகுதியில் நேற்று மாலை மறைவான பகுதியில் ஒரு டெம்போவில் பேக்கரி பொருட்களை ரோட்டோரம் கொட்டி வைத்துவிட்டு மின்னல் வேகத்தில் டெம்போ சென்றது.

    சிறிது நேரத்தில் அந்த பகுதியில் உள்ள சிறுவர்கள் ரோட்டோரம் சாக்லெட், பிஸ்கட் மற்றும் குளிர்பானங்களை கொட்டி இருந்ததை கண்டு பெட்டி பெட்டியாக வீட்டுக்கு எடுத்து சென்றனர். இது அந்த பகுதி முழுவதும் பரவியது. உடனே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வந்த பார்த்தனர். அனைத்து பொருள்களும் காலாவதி யானவை என தெரிய வந்தது.

    உடனே அந்த பகுதி மக்கள் கண்ணணூர் ஊராட்சி மன்ற தலைவர் ரெஜினி விஜிலாபாய் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜ் ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர்.

    இதற்கிடையில் மீண்டும் அதே இடத்திற்கு மற்றொரு டெம்போ காலா வதியான பேக்கரி பொருள் களை கொட்ட வந்தது. உடனே ஊராட்சி மன்ற தலை வரும், வார்டு உறுப்பி னர்கள் ஜெயா அனிதா, மற்றும் ஊர்மக்க ளும் சேர்ந்து வாகனத்தை சிறை பிடித்தார்கள்.

    உடனே திருவட்டார் போலீஸ் நிலையத்திற்கும், உணவு, பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கும், கிராம நிர்வாக அதிகாரி களுக்கும், சுகாதார துறை அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர்.

    அவர் கள் வந்து பார்த்து ஆய்வு செய்து போது வேர்க்கிளம்பி பகுதியை சேர்ந்த பேக்கரி கடையில் உள்ள காலாவதியான பொருள்கள் என்று தெரிய வந்தது. உடனே கடை யின் உரிமையாளர் வர வழைக்கப்பட்டனர்.

    கண்ணனூர் ஊராட்சி மன்றம் சார்பாக இரண்டு டெம்போக்களுக்கும் அபராதமாக ரூ.2100 விதிக்கப்பட்டது. அந்த பணம் உடனே பேக்கரி கடை உரிமையாளரிடம் இருந்து வசூலிக்கப்பட்டது.

    தீவிர விசாரணைக்கு பிறகு அந்த கடை உரிமை யாளரிடம் காலாவதியான பொருள்கள் அனைத்தும் அழிக்க வேண்டும் என்று எழுத்து பூர்மாக அதிகாரிகள் எழுதி வாங்கி கொண்டு அனுப்பி வைத்தனர்.

    சுமார் 3, 4 ஆண்டுகளாக ஒரு பேக்கரி கடையில் இவ்வளவு காலாவதியான பொருட் களை எப்படி பாது காத்து வைத்தார்கள் என்பது குறித்து உடனே மாவட்ட நிர்வாகம் தலை யிட்டு சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதே மாதிரி மாவட்டம் முழுவதும் உள்ள பேக்கரி கடைகளிலும் உள்ள பொருட்களை ஆய்வு செய்ய வேண்டும். காலாவதியான பொருட்களை கண்டறிந்து அழிக்கவேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனர்.

    Next Story
    ×