search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவட்டார் அருகே பாறையை உடைத்து கடத்த முயற்சி - 4 பேர் மீது வழக்கு
    X

    திருவட்டார் அருகே பாறையை உடைத்து கடத்த முயற்சி - 4 பேர் மீது வழக்கு

    • கிட்டாச்சியால் பாறைகளை உடைத்து டெம்போவில் சிலர் ஏற்றிக்கொண்டிருப்பதை பார்த்தனர்.
    • சம்பவ இடத்துக்குச்சென்று கிட்டாச்சியையும், டெம்போவையும் பறிமுதல்

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகளுக்கு திருவட்டார் அருகே கும ரன்குடி கிராமத்துக்குட்பட்ட புல்லுவிளைப்பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் கிட்டாச்சி எந்திரம் வைத்து பாறைகளை உடைத்து டெம்போவில் கடத்தவி ருப்பதாக தகவல் வந்தது.

    இதையடுத்து நேற்று புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குநர் தங்க முனியசாமி, உதவி இயக்குநர் சுரேஷ்கு மார். மதுரை மண்டல புவியியல் துறை பறக்கும் படை அதிகாரிகள் நாகரா ஜன், அரவிந்த், திருவட்டார் வட்ட வருவாய் அதிகாரி அமுதா, கிராம நிர்வாக அதிகாரி மகேஷ்வரி ஆகியோர் புல்லுவிளைக்கு சென்றனர்.

    அப்போது அங்கே கிட்டாச்சியால் பாறைகளை உடைத்து டெம்போவில் சிலர் ஏற்றிக்கொண்டிருப்பதை பார்த்தனர். அதிகாரிகளை கண்டதும் வாகனங்களை விட்டு விட்டு அவர்கள் ஓட்டம் பிடித்தனர். இதுதொடர்பாக திருவட்டார் போலீசில் சுரங்கத்துறை துணை இயக்குநர் தங்க முனியசாமி, பாறை உடைத்த இடத்தின் உரிமையாளர் அகஸ்தீஸ்வரம் மரிய பிரான்சிஸ், பராமாரிப்பாளர் பூவன் கோடு சுனில்ராஜ், டெம்போ ஓட்டுநர் அஜின், கிட்டாச்சி உரிமையாளர் காரியங்கோணம் ஜெனித் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் கொடுத்தார். திருவட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் ஜானகி போலீசாருடன் சம்பவ இடத்துக்குச்சென்று கிட்டாச்சியையும், டெம்போ வையும் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×