என் மலர்
உள்ளூர் செய்திகள்

குளச்சல் அருகே சொத்து பிரச்சினையில் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் - 9 பேர் மீது வழக்கு-2 பேர் கைது
- 8 பேர் ஷோபகுமாரியின் கையை பிடித்து தகராறு செய்ததோடு, இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டலும் விடுத்ததாக போலீசில் புகார்
- பெண் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதில் ஏசுதாஸ், மார்ட்டின் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
கன்னியாகுமரி :
குளச்சல் அருகே உள்ள பத்தறை மேலவிளையை சேர்ந்தவர் விக்ரமன் தம்பி (வயது 70).
இவருக்கும் ரீத்தாபுரம் பகுதியை சேர்ந்த ஏசுதாஸ் என்பவருக்கும் இடையே சொத்து பிரச்னை இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று விக்ரமன் தம்பி தனது மனைவி ஷோபகுமாரியுடன் தங்கள் நிலத்தில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மார்ட்டின், பெலிக்ஸ், ஆரோக்கியம் உள்பட 8 பேர் ஷோபகுமாரியின் கையை பிடித்து தகராறு செய்ததோடு, இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டலும் விடுத்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.
தாக்குதலில் படுகாயமடைந்த ஷோபகுமாரி உடையார்விளையில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து குளச்சல் போலீசார் விசாரணை நடத்தி 9 பேர் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதில் ஏசுதாஸ், மார்ட்டின் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.






