search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் ஓலைச்சுவடியில் எழுதும் எழுத்தாணி காட்சி பொருள் கண்காட்சி
    X

    கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் ஓலைச்சுவடியில் எழுதும் எழுத்தாணி காட்சி பொருள் கண்காட்சி

    • பக்குவப்படுத்தப்பட்ட பனை ஓலைகளில் பல நூல்களை எழுதினர்
    • சுற்றுலாபயணிகள், பொது மக்கள் மாணவ-மாணவிகள் உள்பட பலர் பார்வை யிட்டனர்.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்ட அரசு அருங் காட்சியகத்தில் ஏராளமான அரும் பொருட் கள் உள்ளன. ஒவ்வொரு பொருட்க ளும் பல்வேறு வரலாற்று சிறப்பு மிக்க வை. அத்தனை சிறப்பு மிக்க பொருட்களின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறும் விதமாக மாதம் ஒரு சிறப்பு காட்சி பொருட்கள் கண்காட்சி நடத்த முடிவு செய்யப்பட்டுஉள்ளது.

    ஒவ்வொரு மாதமும் அருங்காட்சியகத்தில் இருப்பில் உள்ள அரும் பொருட்கள் ஏதேனும் ஒன்றினை காட்சிப்படுத்தி அப்பொருளைபற்றிய விளக்கமும் வைக்கப்பட்டுஇருக்கும்.

    அதன்படி தற்போது பனை ஓலையில் எழுத பயன்படுத்தப்படும் எழுத்தாணி காட்சிப் படுத்தப்பட்டு இருந்தது. பண்டைய நாட்களில் காகிதங்கள் வராத நிலையில் பக்குவப்படுத்தப்பட்ட பனை ஓலைகளில் பல நூல்களை எழுதினர். இவை ஓலைச் சுவடிகள் எனப்படுகின்றன.அவ் வாறு எழுத ஓர்எழுது கோல்தேவைப்பட்டது. அதுதான் எழுத்தாணி.எழுத்தாணி பல வகைப் படும்.

    அவை அலகெழுத்தாணி, குண்டெழுத்தாணி, கணையெழுத்தாணி, மடிப்பெழுத்தாணி, மடக்கெ ழுத்தாணி, வாரெழுத்தாணி மற்றும் தேரெழுத்தாணி. இவற்றுள் ஒன்றான மடிப்பெழுத்தாணிதான் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது.

    ஒரு கையின் 5 விரல்களாலும் பிடிக்கப்பட கூடிய ஒரு சிறு மரத்துண்டுகை வழுக்காமல்இருக்க அதன்மீது சற்று ஆழமான கீறல்கள் மற்றும் வேலைப் பாடுகள்ஒரு முனையில் பனை ஓலைகளின் மீதுஅழுத்தி எழுதக் கூரிய முனையுள்ள, தேவை யான அளவு நீண்ட ஆணி மறு முனையில் பனை ஓலைகளை எழுதப் பயன்படும் வகை யில் சிறிய தாகச் சீவ ஒரு கத்தி ஆகியவை களைக் கொண்டதே எழுதும் ஆணி அல்லது எழுத்தாணி ஆகும்.இந்த ஆணியையும், கத்தியையும் மடித்து வைக்க ஏதுவாக அந்த மரத்துண்டின் இரு பக்கங்களிலும் ஆழமாக நீளவாக்கில் குடையப்பட்டு இருக்கும்.

    இந்த வடிவமைப்புதான் பண்டைய காலத்திலும் சமீபத்திய காலத்தது ஆகும். இந்தஆணிகளைக் கொண்டுபனைஓலைகளி ல் மெய்யெழுத்துக்களின் மீது புள்ளிஇடமாட்டார்கள் உயிர்மெய்எழுத்துக்களாக வே எழுதிவிடுவர்.காரணம் புள்ளிகள் வைப்பதால் ஓலைகள் பாழாகிவிடும். நமது முன்னோர்கள் பயன் படுத்திய இந்த அரும்பொ ருளின் முக்கியத்துவத்தை இன்றையதலைமுறையினர் அனைவருக்கும் தெரி விப்பதே இந்தக்கண் காட்சியின் நோக்கமாகும் என்று இந்த கண்காட்சியை தொடங்கி வைத்த நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ. சத்திய வள்ளி தெரிவித்தார்.

    இந்த கண்காட்சியை சுற்றுலாபயணிகள், பொது மக்கள் மாணவ-மாணவி கள் உள்பட பலர் பார்வையிட்டனர்.

    Next Story
    ×