என் மலர்
உள்ளூர் செய்திகள்

அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் மாற்று கட்சியினர் தி.மு.க.வில் இணைந்தனர்
- கிள்ளியூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் நடந்தது
- தி.மு.க.மாநில இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
மார்த்தாண்டம் :
கிள்ளியூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கோபால் தலைமையில் இனையம் புத்தன்துறை ஊராட்சி கவுன்சிலர் தேவதாஸ் உட்பட மாற்றுக் கட்சியினை சேர்ந்த சம்பத், ரஞ்சித் சிங், சஜன், பிரதீஷ், சுஜின், அகில் மற்றும் கீழ்குளம் பேரூராட்சி 1-வது வார்டு சேம்பிளஞ்சி விளை பகுதியை சேர்ந்த சதீஷ் உட்பட பலர் அமைச்சரும், குமரி மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான மனோ தங்கராஜ் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய துணைச் செயலாளர் துரை ராஜ், மத்திக்கோடு ஊராட்சி துணை தலைவர் ஜெனோ ரெனிட்டஸ், குறும்பனை பகுதியை சேர்ந்த ஜீன், மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் சபின் உட்பட பலர் கலந்து கொண்டனர். தி.மு.க.வில் இணைத்து கொண்ட வாலிபர்கள் இன்று குமரி மாவட்டத்திற்கு வருகை தந்த விளையாட்டு துறை அமைச்சரும் தி.மு.க.மாநில இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.






