search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவட்டார் ஒன்றியத்தில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்
    X

    திருவட்டார் ஒன்றியத்தில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்

    • போக்குவரத்து அமைச்சரிடம் விஜய்வசந்த் எம்.பி. மனு
    • நீண்ட காலமாக 16 எ மற்றும் 92 பி என 2 பஸ்கள் மட்டும் இயங்கி வருகிறது.

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஒன்றியத்திற்குட்பட்ட கூற்ற விளாகம், மாத்தார், மேல வெட்டுக்குழி மார்க்கத்தில் புதிய பஸ்களை இயக்க வேண்டும் என திருவட்டார் வட்டார காங்கிரஸ் கமிட்டி, ஏற்றக்கோடு ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி மற்றும் ஊர் மக்கள் சார்பாக விஜய் வசந்த் எம்.பி., தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரை சந்தித்து ஒரு மனு அளித்தார்.

    அதில், திருவட்டார் ஒன்றியம் மேல வெட்டுக்குழி சந்திப்பிலிருந்து மாத்தார், கீழ் மாத்தார், கூற்ற விளாகம் வழியாக திருவட்டார் செல்லும் பிரதான சாலையில் நீண்ட காலமாக 16 எ மற்றும் 92 பி என 2 பஸ்கள் மட்டும் இயங்கி வருகிறது.

    தற்போது அதிகப்படி யான மக்கள் இந்த பகுதியில் வசிப்பதால், போதிய பஸ் வசதி இல்லாமல் தவித்து வருகிறார்கள். ஆகையால் திருவட்டார் வழியாக மார்த்தாண்டம், தக்கலை மற்றும் ஆசாரிப்பள்ளம் அரசு பொதுமருத்துவ மனைக்கு பொதுமக்கள் சென்று வர உதவியாக கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்று குறிப்பிட் டுள்ளார். மனு கொடுக்கும் நிகழ்ச்சியில் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் வக்கீல் ஜெபா, மூத்த காங்கிரஸ் தலைவர் தங்க நாடார், ஏற்றக்கோடு பஞ்சாயத்து தலைவர் ஜான் லெனின், மாவட்ட செயலாளர் ஆற்றூர் குமார், வட்டார பொது செயலாளர் ராஜேஷ், செறுகோல் பஞ்சாயத்து காங்கிரஸ் கமிட்டி தலைவர் அச்சுதன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×