search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் வளர்ச்சி பணிகளில் மெத்தனமாக இருக்கும் அலுவலர்கள் மீது நடவடிக்கை - அமைச்சர் மனோதங்கராஜ் எச்சரிக்கை
    X

    குமரி மாவட்டத்தில் வளர்ச்சி பணிகளில் மெத்தனமாக இருக்கும் அலுவலர்கள் மீது நடவடிக்கை - அமைச்சர் மனோதங்கராஜ் எச்சரிக்கை

    • தமிழக அரசு பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு நலத்திட்டப் பணிகள் மற்றும் வளர்ச்சித்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது
    • அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்களும் வளர்ச்சித்திட்ட பணிகளுக்காக தேவைப்படும் திட்ட மதிப்பீட்டினை தயார் செய்யவும்

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு துறைகளின் சார்பில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்து துறை அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமையில் கலெக்டர் அலுவலக வரு வாய் கூட்டரங்கில் நடை பெற்றது.

    கூட்டத்தில், அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறிய தாவது:-

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு நலத்திட்டப் பணிகள் மற்றும் வளர்ச்சித்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது . குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்து, உடனுக்குடன் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது.

    கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட தேசிய மற்றும் மாநில நெடுஞ் சாலைகளில் பழுதடைந்த சாலைகளை சீர மைக்கும் பணியினை நெடுஞ்சாலைத்துறை மாவட்ட செயற்பொறியாளர் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடனடி யாக சாலைகளை செப்பனிட்டு போக்கு வரத்துக்கும் பொதுமக்க ளுக்கும் எந்தவித பாதிப்பும் இன்றி பயன்பாட்டிற்கு கொண்டுவர அறிவு றுத்தப்படுகிறது. அணைகளில் வரும் நீரின் அளவிற்கேற்ப தேவையான அளவிற்கு தண்ணீர் திறந்து விடவும், அதிகமான தண்ணீர் வரும் பகுதிகள் குறித்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அறிந்துகொள்ளும் வகையில் எச்சரிக்கை அமைக்கவும், பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு), வருவாய்த்துறை உள்ளிட்ட துறைசார்ந்த அலுவலர்க ளுக்கு அறிவுறுத்தப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து அரசு மருத்துவ மனை களையும் சுகாதார மாகவும் , தூய்மையாகவும் வைத்துக்கொள்வதோடு பொதுமக்கள் சிகிச்சை மேற்கொள்ளும் நோய்க ளுக்கு தேவையான மருந்து கள் இருப்பில் வைத்திருக்க வும் அறிவுறுத்தப்பட்டுள் ளது. அதிக கனமழை பெய் தால் கடலில் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்துவதோடு மீன்பிடிக்க சென்று ஏதேனும் மீனவர்கள் திரும்பவில்லை எனில் அதுகுறித்த அறிக்கை யினையும் மாவட்ட நிர்வா கத்திற்கு தெரிவிப்ப தோடு, அவர்கள் கரை சேர்வ தற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளவும், கடல ரிப்பு தடுப்பதற்கான நடவடிக்கையினை மேற் கொள்ளவும் மீன்வளத் துறை உதவி இயக்குநருக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் , கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலை களிலுள்ள தெருவிளக்குகள் பழுது ஏற்பட்டிருந்தால் அதனை உடனடியாக சரி செய்யவும், மரங்களின் கிளைகள் உள்ளிட்டவைகள் ஏதேனும் இடையூறு இருந்தால் மரக்கிளை களை அகற்றவும், பொது மக்களுக்கு எவ்வித இடை யூறுமின்றி மின் இணைப்பு கள் தொடர்ந்து கிடைப்ப தற்கான நடவடிக்கையினை மேற்கொள்ள மின்சா ரத்துறை சார்ந்த அலுவலர்க ளுக்கு அறிவுறுத்தப்பட்டது .

    அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்களும் வளர்ச்சித்திட்ட பணிகளுக்காக தேவைப்படும் திட்ட மதிப்பீட்டினை தயார் செய்யவும் . அதற்கான நிதி ஒதுக்கீடு பெற்று தருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகத்தின் வாயிலாக மேற்கொள்ளப்படும். மேற்குறிப்பிட்ட பணிகளில் மெத்தனமாக இருக்கும் அலுவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

    இவ்வாறு அவர் பேசி னார். கலந்தாய்வு கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா , நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×