என் மலர்
உள்ளூர் செய்திகள்

வெள்ளிச்சந்தை அருகே 9 வயது மகளுடன் இளம்பெண் மாயம்
- 14-ந்தேதி லேல் அடிமை போட்டில் சிலருடன் சேர்ந்து மீன்பிடிப்பதற்காக சென்றுவிட்டார்
- ஆன்சி மற்றும் நான்சி ஆகியோர் வீட்டில் இல்லை
ராஜாக்கமங்கலம் :
வெள்ளிச்சந்தை அருகே முட்டத்தை சேர்ந்தவர் லேல் அடிமை. கடல் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஆன்சி (வயது 29). இவர்களுக்கு 9 வயதில் நான்சி உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 14-ந்தேதி லேல் அடிமை போட்டில் சிலருடன் சேர்ந்து மீன்பிடிப்பதற்காக சென்றுவிட்டார். நேற்று காலை அவர் திரும்பி வந்தபோது வீடு பூட்டி இருந்தது. அவரது மனைவி ஆன்சி மற்றும் நான்சி ஆகியோர் வீட்டில் இல்லை. இதையடுத்து அவர்களை லேல் அடிமை பல்வேறு இடங்களில் தேடினார். எனினும் அவர்களை கண்டு பிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து லேல் அடிமை வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகிறார்
Next Story






