search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவட்டார் அருகே டாரஸ் லாரி-பஸ்க்கு இடையில் சிக்கிய வாலிபர்
    X

    திருவட்டார் அருகே டாரஸ் லாரி-பஸ்க்கு இடையில் சிக்கிய வாலிபர்

    மோட்டார் சைக்கிள் அப்பளம் போல் நொறுங்கியது

    கன்னியாகுமரி :

    குளச்சலில் இருந்து திருவட்டாறு வழியாக பேச்சுபாறைக்கு அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது இந்த பஸ்சில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளும் பொதுமக்கள் பலர் இருந்தனர்.

    இந்த பஸ் திருவட்டார் அடுத்த புத்தன்கடை சந்திப்பில் பயணிகளை இறக்கி கொண்டிருந்தனர். அப்போது பஸ்சின் பின்னால் திருவட்டரில் இருந்து குலசேகரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் ஒருவர் வந்து கொண்டிருந்தார்.

    இதன் பின்னால் அதிக பாரத்துடன் டாரஸ் லாரி வந்து கொண்டிருந்தது அரசு பஸ்சை இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரும் டாரஸ் லாரியும் ஒரே நேரத்தில் முந்திச் செல்ல முயன்றனர். இதில் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் பஸ் மற்றும் டாரஸ் லாரிக்கு இடையில் சிக்கிக் கொண்டார். இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    இந்த விபத்தில் அவரு டைய இருசக்கர வாகனம் அப்பளம் போல் நொறுங்கியது அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் அனைவரும் ஓடி வந்து அந்த வாலிபரை மீட்டு குலசேகரம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அவரை விசாரித்தபோது அவர் கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த ஸ்டீபன் (வயது 40) என்பது தெரிய வந்தது. உடனே அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருவட்டார் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல் காதர் தலைமையில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    காலை மாலை வேளைகளில் இதே மாதிரி அதிக பாரத்துடன் டாரஸ் லாரிகளை அனும திக்கக்கூடாது என்று அந்த பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.

    Next Story
    ×