search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் வசதிக்காக புதிய இணைய தள சேவை
    X

    புதிய இணையதள சேவையை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தபோது எடுத்த படம்  

    குமரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் வசதிக்காக புதிய இணைய தள சேவை

    • அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்
    • Kumaritourism.com என்ற இணையதள சேவை தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக புதிய இணையதள சேவை தொடங்கப்பட்டு உள்ளது.

    இதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்ச்சி, கலெக்டர் அரவிந்த் தலைமையில் நடந்தது. மாநகராட்சி மேயர் மகேஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சுற்றுலா பயணிகளின் வசதிக்காக புதிய இணையதள சேவையை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் பேசிய தாவது:-

    தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சுற்றலாத்தலங்களை மேம்படுத்துவது, இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள அனைத்து கோவில் களையும் சீரமைப்பது உள்ளிட்ட பல்வேறு நட வடிக்கைகளை தமிழக அரசு சீரிய முறையில் மேற்கொண்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக குமரி மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொது மக்களின் வசதிக்காக சுற்றுலா தலங்களை மேம்படுத்தும் நடவடிக்கை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ள ப்பட்டு வருகிறது.

    மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள், கோவில்கள், அருவிகள், மற்றும் பூங்காக்கள்,இயற்கை சூழல் நிறைந்த பகுதிகள், அரிய வகை மூலிகைகள், பழவகைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை சம்பந்தப்பட்ட துறைகளின் ஒருங்கிணைப்புடன் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள Kumaritourism.com என்ற இணையதள சேவை தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மாவட்ட த்திற்குட்பட்ட சுற்றுலா தலங்கள் , கோவில்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் பொது மக்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட அனைவரும் தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் இளைய ராஜா, மாநகராட்சி ஆணையர் ஆனந்த மோகன் , பத்மநாப புரம் உதவி கலெக்டர் கவுசிக், பயிற்சி உதவி கலெக்டர் குணால் யாதவ், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர்விஜயலெட்சுமி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறி யாளர் பாண்டியராஜன், இணைய தளத்தினை உரு வாக்கிய கேப்காம் சொலியூ சன்ஸ் நிறுவனர்அன்பு ராஜா மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

    Next Story
    ×