என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடசேரியில் லாரி மோதி மின்கம்பம் உடைந்தது
    X

    வடசேரியில் லாரி மோதி மின்கம்பம் உடைந்தது

    • தூத்துக்குடிக்கு எரிவாயு ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி சென்றது
    • மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    நாகர்கோவில் :

    கேரளாவில் இருந்து நாகர்கோவில் வழியாக தூத்துக்குடிக்கு எரிவாயு ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி சென்றது. இன்று காலை வடசேரி பகுதியில் வந்தபோது அந்த பகுதியில் உள்ள மின்கம்பம் மீது லாரி மோதியது. இதில் மின்கம்பம் உடைந்தது.

    மின்கம்பிகளும் அறுந்து விழுந்ததால் அந்த பகுதியில் மின்சாரம் தடைப்பட்டது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் வடசேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். மின்வாரிய ஊழியர்களும் சம்பவ இடத்திற்கு வந்து உடைந்து விழுந்த மின்கம்பத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    Next Story
    ×