என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

மணவாளக்குறிச்சி அருகே ரேசன் கடையில் கார் பாய்ந்தது; 3 பேர் படுகாயம்

- டிரைவரின் கட்டுப் பாட்டை இழந்த கார் நிலை தடுமாறி ரேசன் கடை நோக்கி பாய்ந்தது
- காரின் பதிவு எண் முகவரி மூலம் காரை ஓட்டி வந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி :
மணவாளக்குறிச்சி அருகே உள்ள உரப்பனவிளையை சேர்ந்தவர் அய்யாப்பழம். இவரது மகன் சந்திரன் (வயது 35). சம்பவத்தன்று இவர் திருநயினார்குறிச்சி ரேசன் கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார்.
அங்கு அதே பகுதியை சேர்ந்த மணி (68), கோபிநாத் (67) ஆகியோரும் பொருட்கள் வாங்க ரேசன் கடை முன்பு நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு கார் வந்தது. அந்த கார் எதிர்பாராதவிதமாக தாறுமாறாக ஓடியது.
டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் நிலை தடுமாறி ரேசன் கடை நோக்கி பாய்ந்தது. இந்த சம்பவத்தில் கார் மோதியதில் ரேசன் கடை முன்பு நின்ற சந்திரன், மணி, கோபிநாத் ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு ராஜாக்கமங்கலத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து நடந்ததும் காரை ஓட்டி வந்தவர் காரை விட்டு விட்டு தப்பியோடி விட்டார்.
விபத்து குறித்து மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்திற்கு காரணமான காரை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து காரின் பதிவு எண் முகவரி மூலம் காரை ஓட்டி வந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.