search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திற்பரப்பில் 82.4 மில்லி மீட்டர் மழை
    X

    திற்பரப்பில் 82.4 மில்லி மீட்டர் மழை

    • 1500 குளங்கள் நிரம்பியது
    • ஆறுகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கொட்டி தீர்த்த மழை மாவட்டத்தையே புரட்டி போட்டது. நேற்றும் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.

    திற்பரப்பு அருவி பகுதியில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. நேற்று இரவு 2 மணி நேரத்திற்கு மேலாக அங்கு கனமழை பெய்தது. ஏற்கனவே கோதை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டிவரும் நிலையில் தொடர் மழையின் காரண மாக அருவியில் தண்ணீர் அதிக அளவு கொட்டுகிறது. அங்குள்ள சிறுவர் பூங்காவை மூழ்கடித்து வெள்ளம் செல்வதால் பொதுமக்கள் குளிப்பதற்கு இன்றும் தடை விதிக்கப் பட்டுள்ளது.

    திற்பரப்பில் அதிகபட்ச மாக 82.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. களியல், பூதப்பாண்டி, மயிலாடி, அடையாமடை, தக்கலை, குளச்சல், மயிலாடி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று இரவும் மழை பெய்தது.

    பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைப்பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு அதிக அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றாறு அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து குறைய தொடங்கி யதையடுத்து அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீரின் அளவும் படிப்படியாக குறைக்கப் பட்டு வருகிறது. அணையில் இருந்து இன்று காலை 537 கன அடி உபரி நீரும், 200 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாகவும் வெளியேற் றப்பட்டு வருகிறது. இதனால் கோதையாற்றில் வெள்ளம் தொடர்ந்து கரைபுரண்டு ஓடுகிறது. குழித்துறை ஆற்றிலும் வெள்ளம் பெருக் கெடுத்து ஓடுவதால் பொது மக்கள் கரையோர பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    தொடர் மழையின் காரண மாக முன்சிறை, வைக்க லூர், தீக்குறிச்சி பகுதி களில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் இன்னும் வடியவில்லை. இதனால் பொதுமக்கள் பரிதவிப் பிற்கு ஆளாகி உள்ளனர். பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 38.35 அடியாக உள்ளது. அணைக்கு 1001 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 224 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 67.25 அடியாக உள்ளது. அணைக்கு 616 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    சிற்றார் 1- அணை நீர்மட்டம் 15.91 அடியாகவும், சிற்றார் 2-அணை நீர்மட்டம் 16 அடியாகவும் உள்ளது. பொய்கை அணை நீர்மட்டம் 8.90 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 48.39 அடியாகவும், முக்கடல் அணை நீர்மட்டம் 19.50 அடியாகவும் உள்ளது. அணைகளில் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். தொடர் மழையின் காரணமாக வள்ளி ஆறு, பரளியாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    சானல்களிலும் வெள் ளம் பெருக்கெடுத்து ஓடுவ தால் பாசன குளங்கள் நிரம்பி வருகின்றன. மாவட் டம் முழுவதும் 1500-க்கும் மேற்பட்ட குளங்கள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. 200-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பி வருகின்றன. குளங் கள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தொடர் மழைக்கு நேற்று மாவட்டம் முழுவதும் 9 வீடுகள் இடிந்து விழுந்துள் ளது. அகஸ்தீஸ்வரம் தாலு காவில் ஒரு வீடும், விளவங் கோட்டில் 5 வீடுகளும், கிள்ளியூரில் 3 வீடுகளும் இடிந்து விழுந்துள்ளன.

    குலசேகரம், கீரிப்பாறை பகுதியில் உள்ள ரப்பர் தோட்டங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் தொழி லாளர்கள் வேலை இன்றி தவித்து வருகிறார்கள். ரப்பர் மரங்களில் கட்டப் பட்டுள்ள சிரட்டைகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் ரப்பர் பால் உற்பத்தி அடியோடு பாதிக் கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 1.8, பெருஞ்சாணி 12.4, சிற்றார் 1-17.2, சிற்றார் 2-57.4, பூதப்பாண்டி 3.2, களியல் 79.2, மயிலாடி 2.6, சுருளோடு 15, தக்கலை 1.1, குளச்சல் 4, பாலமோர் 20.4, மாம்பழத்து றையாறு 4, திற்பரப்பு 82.4, அடையாமடை 27.2, முக் கடல் 2.2.

    Next Story
    ×