search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவட்டார் அருகே சொகுசு கார் மோதி தள்ளுவண்டி வியாபாரி உள்பட 7 பேர் படுகாயம்
    X

    விபத்துக்குள்ளான கார் 

    திருவட்டார் அருகே சொகுசு கார் மோதி தள்ளுவண்டி வியாபாரி உள்பட 7 பேர் படுகாயம்

    • திற்பரப்பு அருவிக்கு சென்று விட்டு திரும்பி வரும்போது அதிவேகமாக வந்து விபத்தை ஏற்படுத்தியுள்ளனர்
    • திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே குலசேகரத்தில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி அதிவேகமாக வந்த கார் தள்ளுவண்டியில் மோதியதில் தள்ளுவண்டி வியாபாரி மற்றும் காரில் இருந்தவர்கள் உட்பட 7 பேர் படுகாயமடைந்தனர்.

    இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

    குலசேகரத்தை அடுத்த வலியாற்று முகத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 36) இவரது மனைவி சித்ரா (32) இவர் உடல்நிலை சரியில்லாமல் நடப்பதற்கு சிரமப்பட்டு வந்தார். இவர்களுக்கு ஒரே மகன் உள்ளார். புலியிறங்கி பகுதியில் உள்ள ஒரு வீட்டின் கீழ்த்தளத்தில் வாடகைக்கு குடியிருக்கின்றனர். வாடகைக்கு குடியிருக்கும் வீட்டின் முன்புறம் நிறுத்தி வைத்திருக்கும் தள்ளு வண்டியில் கணவனும் மனைவியும் கூழ், மோர் மற்றும் பலகார வியாபாரம் நடத்தி வந்தனர்.

    இவர்களின் வருமானத்துக்கான ஒரே ஆதாரம் இந்த தள்ளுவண்டி கூழ், மோர், பலகார வியாபாரம்தான். இதை வைத்து குடும்பம் நடத்தினர்.

    நேற்று மதியம் உணவருந்த சித்ரா வீட்டுக்கு சென்றிருந்தார். அப்போது தள்ளு வண்டியில் பிரகாஷ் மட்டும் வியாபாரத்தை கவனித்துக் கொண்டிருந்தார். தள்ளு வண்டியின் முன் புறம் காஞ்சிரகோடு பகுதியை சேர்ந்த ரெனால்டு ஜெபா என்பவர் கூழ் குடித்துக் கொண்டிருந்தார். அப்போது குலசேகரம் - மார்த்தாண்டம் ரோட்டில் அதிவேகமாக வந்து கொண்டிருந்த சிவப்பு நிற சொகுசு கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தள்ளுவண்டி யையும், கூழ் குடித்துக்கொண்டிருந்த ரெனால்டு ஜெபாவையும் இடித்துக் கொண்டு அருகில் உள்ள காம்பவுண்டை ஒட்டி நின்றிருந்த ரப்பர் மரத்தில் மோதி நின்றது. தள்ளு வண்டியும், காரின் முன்பக்க இடதுபுறமும் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் விபத்துக்குள்ளான சொகுசுகார் தற்போதுதான் புதியதாக எடுக்கப்பட்டது. காரின் முன்பகுதியில் இருந்த இரண்டு ஏர்பேக் ஓப்பன் ஆனதால் வண்டியில் இருந்தவர்கள் அதிர்ஷ்ட வசமாக உயிர்பிழைத்தார் கள். ரோட்டோரம் இதைப்பார்த்துக்கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கார் மோதியதில் தள்ளுவண்டியின் உள்புறம் நின்றிருந்த பிரகாஷ்க்கு இடுப்பின் கீழ்பகுதி மற்றும் கால்களில் படுகாயம் ஏற்பட்டது. அவரை அருகிலிருந்த வர்கள் குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரகாஷ் அனுப்பி வைக்கப்பட்டார்.

    இந்நிலையில் காரில் முன்புறம் இருந்தவர்க ளுக்கும். பின்புறம் இருந்தவர்களுக்கும் காயம் ஏற்பட்டது. அவர்கள் குலசேகரம் மற்றும் மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட னர். ரெனால்டு ஜெபா குலசேகரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கக் பட்டார்.

    போலீஸ் விசாரணையில் வெள்ளிச்சந்தையைச் ேசர்ந்த அஜித்குமாருக்கு சமீபத்தில் திருமணமாகி உள்ளது. இராணுவத்தில் பணியாற்றும் இவர் உறவினர் வீட்டு விருந்துக்கு நேற்று வந்தார். மனைவியை உறவினர் வீட்டில் விட்டு விட்டு இவர்கள் நண்பர்கள் குளச்சல் அரவிந்த் (17), கொல்வேல் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (27), விஜூ (23), வினீத் (25) ஆகியோருடன் காரில் திற்பரப்பு அருவிக்கு சென்று விட்டு திரும்பி வரும்போது அதிவேகமாக வந்து புலியிறங்கியில் தள்ளுவண்டியில் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளனர் என்பது தெரியவந்தது. சம்பவம் குறித்து திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருவட்டார் இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்காதர் சம்பவ இடத்தை பார்வையிட்டு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார். ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்தியில் பிரகாஷ்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×