என் மலர்
உள்ளூர் செய்திகள்

களியக்காவிளை அருகே மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு
- தண்ணீர் கேட்பது போல் கைவரிசை
- களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
களியக்காவிளை அருகே மடிச்சல் பகுதியை சேர்ந்தவர் குட்டப்பன் அவருடைய மனைவி லீலா (வயது 66).
இவர்கள் மடிச்சல் பகுதியில் மகன் வீட்டில் தங்கி உள்ளனர். நேற்று காலை மகன் வேலைக்கு சென்று விட்டார். மருமகளும், பிள்ளையும் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தனர். லீலா வீட்டின் முன் நிற்கும்போது இருசக்கர வாகனத்தில் 2 பேர் வந்துள்ளனர்.
அதில் ஒருவன் கீழே இறங்கி மூதாட்டியிடம் தண்ணீர் கேட்பது போல் பக்கத்தில் வந்துள்ளான். அப்போது அவன், லீலா கழுத்தில் கிடந்த 8 பவுன் செயினை பறித்துள்ளான். ஆனால் அவர் விடாமல் செயினை பிடித்துக் கொண்டு திருடன்... திருடன்... என்று கூச்சலிட்டார்.
சத்தம் கேட்டு வீட்டின் உள் படுத்திருந்த கணவரும் அக்கம் பக்கத்தினரும் ஓடி வரவே கொள்ளை யர்கள் அங்கிருந்து ஓட்டம் எடுத்தனர். அப்போது அவர்களது கையில் 5 பவுன் நகை சிக்கிக் கொண்டது. அதனுடன் இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றுள்ளனர். லீலா கையில் 3 பவுன் நகை கிடைத்தது.
இது குறித்து லீலா கொடுத்த புகாரின் பேரில் களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அருகில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளையும் கைப்பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.