search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் 4 வழிச்சாலை பணிகள் விரைவில் தொடங்கும் - விஜய் வசந்த் எம்.பி. அறிவிப்பு
    X

    குமரி மாவட்டத்தில் 4 வழிச்சாலை பணிகள் விரைவில் தொடங்கும் - விஜய் வசந்த் எம்.பி. அறிவிப்பு

    • கல் மண் எடுப்பதற்கு நீதிமன்றம் தடை விதித்த நிலையில் பணிகள் பாதிக்கப்பட்டது
    • மத்திய அரசிடம் கோரி ரூ.14.99 கோடி பெற்று கொடுத்ததையும் நினைவுபடுத்துகிறேன்.

    நாகர்கோவில் :

    விஜய் வசந்த் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறி இருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டம் காரோடு முதல் கன்னியாகுமரி வரையிலான 4 வழிச்சாலை பணிகள் குமரி மாவட்டத்திலிருந்து கல் மண் எடுப்பதற்கு நீதிமன்றம் தடை விதித்த நிலையில் பணிகள் பாதிக்கப்பட்டது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் 2019 ஜூலை மாதம் மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சரை சந்தித்து மனு அளித்தார். பின்னர் கொரோனா தாக்கத்தினால் இந்த பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

    நான் மக்கள் ஆதரவோடு வெற்றி பெற்று நாடாளு மன்ற உறுப்பினர் ஆன பின்னர் 2021-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சரை சந்தித்து பணி களை மீண்டும் தொடங்கவேண்டும் என கோரினேன். பணிகள் தொடங்காமல் இருந்த பட்சத்தில் மீண்டும் அமைச்சரை 2022-ம் ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் தொடர்பு கொண்டு பணிகளை தொடங்க கோரினேன்.

    2022-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்த பணியை செய்து வந்த நிறுவனம் இந்த பணி ஒப்பந்தத்தை நிறைவேற்ற இயலாமல் விலகி விட்டது. இது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது கேள்வி எழுப்பினேன். மேலும் கவன ஈர்ப்பு கோரிக்கை ஒன்றினையும் சமர்ப்பித்தேன். மாவட் டத்தில் மண் எடுப்பதற்கு அனுமதி கிடைக்காததால் பக்கத்து மாவட்டத்திலிருந்து மண் எடுப்பதற்கு மாநில அரசு அனுமதி அளிக்கும் பட்சத்தில் இந்த பணியை மீண்டும் தொடங்கலாம் என மத்திய அரசு தெரிவித்தது. அதை தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து மண் எடுக்க கோரிக்கை வைத்தேன். தமிழக அரசு அதற்கான அனுமதி அளித்தது.

    இந்த பணியை மீண்டும் தொடங்க சுமார் ஆயிரம் கோடி ரூபாய் அதிக நிதி தேவை என நெடுஞ்சாலைத்துறை தெரிவித்ததை தொடர்ந்து மத்திய அரசிடம் இந்த பணியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து நிதியும் பெறப்பட்டது.

    கடந்த வருடம் நவம்பர் மாதம் நெடுஞ்சாலை துறை இயக்குனரை சந்தித்து சாலை பணிகளை விரைவில் தொடங்க வலியுறுத்தியதின் பெயரில் டிசம்பர் மாதம் இந்த பணிக்கான டெண்டர் விடப்பட்டது. டெண்டர் விடப்பட்ட பின்னரும் ஒப்பந்தம் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதை கண்டு கடந்த மாதம் மீண்டும் அமைச்சரை சந்தித்து ஒப்பந்தத்தை விரைந்து இறுதி செய்ய கோரினேன். மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி இதற்காக போராட்டம் நடத்தியது.

    தொடர் முயற்சிகளின் வெற்றியாக நேற்று குமரி மாவட்டம் வழியாக கடந்து செல்லும் 4 வழிச்சாலை பணிகளுக்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு ஒப் பந்தக்காரருக்கு வழங்கப்பட் டது. இந்த பணிகள் விரைவில் தொடங்கும். மட்டுமல்லாமல் 4 வழிச் சாலை தாமதமாவதை கருத்தில் கொண்டு தற்பொ ழுது உபயோகத்தில் உள்ள நெடுஞ்சாலையை செப்பனிட்டு சீரமைக்க மத்திய அரசிடம் கோரி ரூ.14.99 கோடி பெற்று கொடுத்ததையும் இத்தருணத்தில் நினைவுபடுத்துகிறேன்.

    4 வழிச்சாலை பணிகளுக்காக நிலத்தை அளித்த நில உரிமையாளர்களுக்கு தகுந்த நிவாரணம் தராததை அறிந்து அதை பெற்று தரவும் உரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். பாரதிய ஜனதா கட்சியினர், மத்தியில் ஆட்சியில் இருந்தபோதும் கன்னியாகுமரி மக்களுக்கு உதவ முன்வரவில்லை. ஆனால் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட நிலையில் அதற்கு உரிமை கொண்டாட ஓடி வருவது அரசியல் லாபத்துக்காக மட்டுமே.

    முன்னாள் மத்திய மந்திரி பாரதிய ஜனதா இங்கு வெற்றி பெற்றால் மட்டுமே இந்த சாலை பணிகள் இனிமேல் நடைபெறும் என்று சவால் விட்டதை மக்கள் மறந்திருக்க மாட்டார் கள். 4 வழிச்சாலை பணி கள் தொடங்கி அதை கூடிய விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர இன்னும் முயற்சிகள் தொடரும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×