search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் 4 வழிச்சாலை பணிகளை விரைவில் முடிக்க வேண்டும்
    X

    குமரி மாவட்டத்தில் 4 வழிச்சாலை பணிகளை விரைவில் முடிக்க வேண்டும்

    • சாலையில் கட்டணம் வசூலிப்பதை தவிர்க்க வேண்டும்.
    • மத்திய மந்திரியிடம் விஜய்வசந்த் எம்.பி. மனு

    நாகர்கோவில்:

    மத்திய நெடுஞ்சாலை துறை மந்திரி நிதின் கட்கரியை கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சந்தித்து கன்னியாகுமரி மாவட்டம் மக்களின் சார்பாக கோரிக்கைகளை முன் வைத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    காரோடு- காவல்கிணறு இடையிலான நான்கு வழி பாதை சாலை பணிகள் முடிவடையாமல் இருப்பதை சுட்டிக்காட்டி அதை தக்க நடவடிக்கைகள் மூலமாக விரைவில் முடித்து வைக்க வேண்டும், கல், மண் பற்றாக்குறையினால் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் காலதாமதத்தை காரணம் காட்டி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது மாநில அரசு அண்டை மாவட்டங்களில் இருந்து கல், மண் தர ஒப்புக்கொண்ட நிலையில் புதிய ஒப்பந்ததாரரை முடிவு செய்து பணியினை விரைவாக தொடங்க வேண்டும்.

    தற்போதைய தேசிய நெடுஞ்சாலை பரா மரிப் பிற்காக சுமார் ரூ.15 கோடி பெற்று தந்த போதிலும் அதற்கான பணிகள் தொடங்காமல் இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அறிவுறுத்தி அப்பணிகளை விரைவில் தொடங்க வேண்டும். நாகர்கோவில் அப்டா மார்க்கெட் காவல்கிணறு இடையேயான நான்கு வழிச்சாலை பொது மக்களின் பயணத்திற்காக திறந்து கொடுக்க வேண்டும் எனவும் அந்த சாலையில் கட்டணம் வசூலிப்பதை தவிர்க்க வேண்டும். அத்துடன் நான்கு வழி சாலைக்காக நிலத்தை விட்டுத் தந்த நில உரிமையாளர்களுக்கு கொடுக்க வேண்டிய நிவாரணத் தொகை நிலுவையை உடனடியாக கொடுத்து மேலும் அனை வரும் ஒரு போல் பய னடையும் வகையில் நிவாரணத் தொகை மறு ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும்.இவ்வாறு இந்த மனுவில் கூறியிருந்தார்.

    கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட மத்திய மந்திரி விரைவில் கோரிக்கை களுக்கு தீர்வு காணப்படும் என உறுதியளித்தார்.

    Next Story
    ×