search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூதப்பாண்டி அருகே காரில் கடத்தி வந்த 300 கிலோ குட்கா பறிமுதல்
    X

    பூதப்பாண்டி அருகே காரில் கடத்தி வந்த 300 கிலோ குட்கா பறிமுதல்

    • பறிமுதல் செய்யப்பட்ட குட்கா புகையிலையையும், காரையும் பூதப்பாண்டி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
    • தப்பி ஓடிய ஜெயக்குமா ரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்

    பூதப்பாண்டி :

    குமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா விற்பனையை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு அதிரடி நடவ டிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கன்னியாகுமரி, நாகர்கோவில், தக்கலை, குளச்சல் சப்-டிவிஷன் களுக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் தினமும் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். குட்கா விற்பனை செய்பவர்களை போலீசார் கைது செய்வது டன் அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பூதப்பாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமையிலான போலீசார் இன்று அதிகாலை காட்டுப்பு தூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஓரு கார் வந்தது. அதனை தடுத்து நிறுத்தினர். அப் போது ஒருவர் தப்பி ஓடி விட்டார். டிரைவரை பிடித்து விசாரணை நடத்தி னர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் காரை சோதனை செய்தனர்.

    அப்போது காரில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை இருந்தது தெரிய வந்தது. காரில் மூட்டை மூட்டையாக இருந்த குட்கா புகை யிலையை போலீசார் பறிமுதல் செய்தனர். சுமார் 300 கிலோ குட்கா புகையிலை சிக்கியது. இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட குட்கா புகையிலையையும், காரையும் பூதப்பாண்டி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

    பிடிபட்ட டிரைவரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் காட்டுப்புதூர் புது காலனி பகுதியை சேர்ந்த நாகராஜன் (வயது 40) என்பது தெரியவந்தது. தப்பி ஓடிய நபர் காற்றாடி விளையை சேர்ந்த ஜெயக்கு மார் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நாகராஜனிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரு கிறார்கள். குட்கா புகையிலை எங்கிருந்து வாங்கப்படுகிறது. இதில் வேறு யாருக்காவது தொடர்பு உண்டா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    தப்பி ஓடிய ஜெயக்குமா ரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×