search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    3 நாட்களில் 20 ஆயிரம் சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டனர்
    X

    3 நாட்களில் 20 ஆயிரம் சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டனர்

    • ஓணம் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு கூட்டம்
    • கடல் நீர் மட்டத் தாழ்வு காரணமாக காலை ஒரு மணி நேரம் தாமதமாக போக்குவரத்து தொடங்கியது.

    கன்னியாகுமரி :

    சுற்றுலா தலமான கன்னியா குமரிக்கு தினமும் ஆயிரக்க ணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    இந்த நிலையில் ஓணம் பண்டிகை விடுமுறையை யொட்டி கடந்த 3 நாட்களாக கன்னியா குமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்து சூரியன் உதயம் மற்றும் அஸ்த மனத்தை பார்த்து மகிழ்ந்தனர்.

    மேலும் விவேகானந்தர் மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை போன்றவற்றை படகில் சென்றும் பார்வையிட்டனர். 3 நாட்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டனர். நேற்று முன் தினம் 7 ஆயிரத்து 40 பேரும், நேற்று 8 ஆயிரம் பேரும் இன்று 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளும் பார்வையிட்டனர். இதற்கிடையில் கடல் நீர் மட்டத் தாழ்வு காரணமாக இன்று காலை ஒரு மணி நேரம் தாம தமாக காலை 9 மணிக்கு தொடங்கியது. அதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை மட்டும் பார்வையிட்டு வந்தனர்.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலிலும் பக்தர்கள் திரண்டு தரிசனம் பெற்றனர்.

    Next Story
    ×