என் மலர்
உள்ளூர் செய்திகள்

தக்கலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை தாக்கி நகை பறித்த 2 பேர் கைது - பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்
- சுஜியின் கழுத்தில் கிடந்த 11 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றார்
- சுபா தனது காலால் மோட்டார் சைக்கிளை மிதித்தார். இதில் மோட்டார் சைக்கிளும், இருசக்கர வாகனமும் நிலை தடுமாறி கிழேவிழுந்தன.
கன்னியாகுமரி :
தக்கலை அருகே உள்ள கூட்டமாவு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி சுபா (வயது 35). இவரது தங்கை சுஜி (30). இவர்கள் நேற்று அழகியமண்டபத்தில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொள்ள சென்றனர்.
பின்னர் இரவு 9 மணியளவில் சுபாவும், சுஜியும் இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தனர். அழகியமண்டபம் சந்திப்பை கடந்து சென்ற போது பின்னால் ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர்.
அவர்களில் ஒருவன் சுஜியின் கழுத்தில் கிடந்த 11 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றார்.இதை கவனித்த சுபா தனது காலால் மோட்டார் சைக்கிளை மிதித்தார். இதில் மோட்டார்சைக்கிளும், இருசக்கர வாகனமும் நிலை தடுமாறி கிழேவிழுந்தன.
உடனே, மோட்டார் சைக்கிளில் வந்தவர்களில் 2 பேர் எழுந்து ஓடினர். ஒருவர் காயமடைந்து மோட்டார் சைக்கிளுடன் சிக்கி கொண்டார்.
அவரை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பிடித்து தர்மஅடிகொடுத்து தக்கலை போலீஸ் நிலைய த்தில் ஒப்படைத்தனர்.போலீசார் அவரை கைது செய்து நடத்திய விசாரணையில் அவர் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பது தெரிய வந்தது.
அவருக்கு காயம் ஏற்பட்டி ருந்ததால் தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக் காக சேர்த்தனர். மேலும் இந்த சம்பவத்தில் கீழே விழுந்த சுபாவும், சுஜியும் காயமடைந்தனர்.
இந்த நிலையில் தப்பி ஒடிய 2 பேரை தக் கலைபோலீசார் தேடி வந்தனர். இதில் ராஜேசின் கூட்டாளியான ரமேஷ் (29) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவரும் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.